Published:Updated:

"கட்சி முக்கியமா...சாப்பாடு முக்கியமா?' - தொண்டர்களை எச்சரித்த ஈவிகேஎஸ்!

விழுப்புரம்: ''ரொம்ப காலமாக கூட்டம் நடத்தாதால் எப்படி கூட்டம் நடத்துவது என்பதையே மறந்துவிட்டோம். சாப்பாடு முக்கியமா? கட்சி முக்கியமா?" என  கூச்சல் போட்ட தொண்டர்களை அதட்டினார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். 

மேலும் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்  ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 1 ரூபாய் 35 காசுகள்  லஞ்சமாக பெறுகிறார் என  இளங்கோவன் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று (2ஆம் தேதி) நடந்தது. இதில் கலந்து கொண்டு அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ''மத்தியிலும், மாநிலத்திலும் ஆள்கிறவர்கள் பொய் பேசுவதில் மன்னர்களாக இருக்கிறார்கள். மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

"கட்சி முக்கியமா...சாப்பாடு முக்கியமா?' - தொண்டர்களை எச்சரித்த ஈவிகேஎஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேபோல், தமிழகத்தில் ஒருவர் தண்டனை பெற்றதால் நல்லகாலம் பிறந்தது போல மழை பொழிகிறது. மழை பெய்தாலும் விவசாயிகளுக்கு உரம் கிடைக்கவில்லை. டெல்லிக்கு நேரில் சென்று உரத்தை பெற வேண்டிய பன்னிர்செல்வம் கடிதம் மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறார்.

நடிகர்கள் அரசியலுக்கு வந்துவிட்டதால், ஆட்சியாளர்கள் நடிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர். கண்ணீர் விடாமல் எப்படி அழுவது என்ற சாதனையை முப்பது அமைச்சர்களும் செய்து காட்டினார்கள். அதே போல மூக்கில் சளி ஒழுகாமல் சளியை போக்குவது எப்படி என்பதையும் அமைச்சர்கள் எங்களுக்கு கற்றுத்தரவேண்டும்.

"கட்சி முக்கியமா...சாப்பாடு முக்கியமா?' - தொண்டர்களை எச்சரித்த ஈவிகேஎஸ்!

தமிழகத்தில் பருப்பு, முட்டை, மின்சாரம் என எல்லாவற்றிலும் ஊழல் நிலவுகிறது. மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தான் லஞ்சல் வாங்கவில்லை என்று சொல்லமுடியுமா?. ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 1 ரூபாய் 35 காசுகள்  லஞ்சமாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பெறுகிறார் என்று நான் சொல்கிறேன். முடிந்தால் என் மீது வழக்கு போட்டு பாருங்கள்.

மொட்டை அடித்தால் 1000, பூஜை செய்தால் 5000, யாகம் செய்தால் 10,000, மண்சோறு சாப்பிட்டால் 15,000, ஊரில் யாருக்காவது மாரடைப்பு வந்தால் மூனு லட்சம். இதுதான் அ.தி.மு.க அரசு செய்த ஒரே நன்மை. எனக்கு வயது அறுபதுக்கு மேலாகிவிட்டது, இனி இறந்தால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது. எனவே, ஒருவேளை நான் இறந்தால் இறப்பதற்கு முன் ஜெயலலிதா என்று கூறிக்கொண்டே இறந்ததாக கூறுமாறு என் மனைவிடம் சொல்லியிருக்கிறேன். மூணு லட்சமாவது கிடைக்குமல்லவா. இதுவெல்லாம் யார் வீட்டு பணம். லஞ்சமாக பெற்ற பணம் தான்’’ என்றார்.

"கட்சி முக்கியமா...சாப்பாடு முக்கியமா?' - தொண்டர்களை எச்சரித்த ஈவிகேஎஸ்!

முன்னதாக, இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு அளிக்கிறார்கள் எனத் தெரிந்ததும், தொண்டர்கள் பந்திக்கு முந்திக்கொண்டு கிளம்பினர். இதனால் அங்கு கூச்சல் நிலவியது.

இதனால் ஆத்திரமடைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ''ரொம்ப காலமாக கூட்டம் நடத்தாதால் எப்படி கூட்டம் நடத்துவது என்பதையே மறந்துவிட்டோம். சாப்பாடு முக்கியமா? கட்சி முக்கியமா? கூச்சல் போடுகிறவர்கள் யாராக இருந்தாலும் இங்கேயே கட்சியை விட்டு நீக்கிவிடுவேன்’’ என்றார். இதையடுத்து, தொண்டர்கள் அமைதியானார்கள்.

ஆ.நந்தகுமார்

படங்கள்: தே.சிலம்பரசன்