Published:Updated:

நவீன அணு இயற்பியலின் தந்தை ஜே.ஜே தாம்சன் - பிறந்த தின சிறப்பு பகிர்வு!

நவீன அணு இயற்பியலின் தந்தை ஜே.ஜே தாம்சன் - பிறந்த தின சிறப்பு பகிர்வு!

நவீன அணு இயற்பியலின் தந்தை ஜே.ஜே தாம்சன் - பிறந்த தின சிறப்பு பகிர்வு!

நவீன அணு இயற்பியலின் தந்தை ஜே.ஜே தாம்சன் - பிறந்த தின சிறப்பு பகிர்வு!

நவீன அணு இயற்பியலின் தந்தை ஜே.ஜே தாம்சன் - பிறந்த தின சிறப்பு பகிர்வு!

Published:Updated:
நவீன அணு இயற்பியலின் தந்தை ஜே.ஜே தாம்சன் - பிறந்த தின சிறப்பு பகிர்வு!

வீன அணு இயற்பியலின் தந்தை என அழைக்கப்படும் ஜே.ஜே தாம்சன் எனும் சர்.ஜோசஃப் ஜான் தாம்சன் டிசம்பர் 18,1856ல் இங்கிலாந்தில் மான்செஸ்டரில் பிறந்தார். இவரது தாய் எம்மா ஸ்விண்டெல் மற்றும் தந்தை ஜோசப் ஜேம்ஸ் தாம்சன் ஸ்காட்டிய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

நவீன அணு இயற்பியலின் தந்தை ஜே.ஜே தாம்சன் - பிறந்த தின சிறப்பு பகிர்வு!

14 வயதிலேயே இவருக்கு இருந்த அதீத அறிவியல் ஆர்வத்தினால், ஓவன்ஸ் கல்லூரியிலும், பின் டிரினிட்டி கல்லூரியிலும் படித்தார். அங்கு சிறப்பாக படித்து ஆதம்சு பரிசை வென்றதோடு, அக்கல்லூரியின் வாழ் நாள் உறுப்பினரானார். கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் ஆய்வு முறை இயற்பியலில், கேவண்டிஸ் ஆய்வுக்கூட பேராசிரியர் ஆனார்.

இவரது மனைவி ரோஸ் பேஜட் பேராசிரியர். குழந்தைகள் ஜார்ஜ் மற்றும் ஜோன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அணுவின் அடிப்படை பொருளான மிண்ணனு எனப்படும் எலெக்ட்ரானை கண்டுபிடித்து, அணுவில் உள்ள மொத்த நேர் மின்னூட்டம் மற்றும் எலெக்ட்ரானால் உருவாக்கப்படும் எதிர் மின்னூட்டம் இவை சமமாக இருப்பதால், அணுவானது நடுநிலைத்தன்மை பெற்று விளங்குகிறது எனக் கூறிய ஆங்கில இயற்பியலாளர்.

மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். எலெக்ட்ரான்கள் அவற்றின் சமநிலையை பொறுத்து சீரிசை இயக்கத்தில் அலைவுறுவதால் நிறமாலை வரிகள் தோன்றுகின்றன என இயற்பியலின் முக்கியமான கண்டுபிடிப்பை வெளியிட்டவர். கேத்தோடு கதிர்கள் எதிர் மின்னூட்டம் கொண்டவை என்பது தொடர்பான ஆய்வும் பிரபலமானது.

ஒளியின் அமைப்பு(1907), பொருளின் துகள் கொள்கை (1913),நேர் மின்சார கதிர்கள்(1913) இவர் மிக சிறந்த இயற்பியலை விளக்கும் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரின் மின் காந்த அலைகள் பற்றிய  ஆய்வு பிற்காலத்தில் மேக்ஸ்வெல் என்பவரால் விரிவாக ஆராய்ச்சி செய்ய அடிப்படையானது. இதன் விளைவாலே தற்போது வாயு கடத்திகள் வளர்ச்சி நவீன தொழில்நுட்பத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இவர் மின்னிறக்க குழாயில் மின்சாரத்தை செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளை கண்டறிந்த  ஆய்வுகளுக்காக 1906 ம் ஆண்டுக்கான "நோபல் பரிசை" பெற்றுள்ளார்.

சிறந்த பேராசிரியர் என்பதற்கு சான்று அஸ்டன் (1922-வேதியியல்), அணுவின் உட்கருவினை ஆராய்ச்சி செய்த ரூதர்போர்டு உட்பட இவரது பல ஆராய்ச்சி மாணவர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.இலத்தீரன் விளிம்பு விளைவு சோதனைக்காக 1937 ல் இவரது மகன் ஜார்ஜ் பேஜட் தாம்சன் நோபல் பரிசு பெற்றுள்ளார். 1918 ல் இருந்து டிரினிட்டி கல்லூரி முதல்வராகவும் இருந்தவர்.

இயற்பியலில் அணுவை பற்றிய அடிப்படை உண்மைகளை விளக்கிய தாம்சன் ஆகஸ்டு 30,1940 ல் தனது 83வது வயதில் தனது பல அரிய கண்டுபிடிப்புகளை ,அறிவியல் உண்மைகளை இவ்வுலகிற்கு தந்து உயிர் நீத்துள்ளார்.

பா.சிதம்பர பிரியா,
(மாணவ பத்திரிக்கையாளர்)