Published:Updated:

டப்பிங் கலைஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை!

டப்பிங் கலைஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவுக்கு  நீதிமன்றம் தடை!
டப்பிங் கலைஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை!
டப்பிங் கலைஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவுக்கு  நீதிமன்றம் தடை!

சென்னை: தென்னிந்திய திரைப்பட பின்னணிக் குரல் ( டப்பிங்) கலைஞர்கள் சங்கத்தின் செயல்பாடுகளை எதிர்த்து கேள்வி எழுப்பியதால், நீக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு சிட்டி சிவில் கோர்ட் தடை விதித்தது.

இதுதொடர்பாக , இச்சங்கத்தின் உறுப்பினர்கள் மதியழகன் , மகாலட்சுமி , கண்ணன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,“ நாங்கள் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர் , நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்கள். சங்கத்தில் 2000 ம் ஆண்டு முதல் உறுப்பினர்களாக இருந்து வருகிறோம்.

எங்களுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் நேரடியாக சம்பளம் கொடுத்து வந்தது.

பின்னர், சங்கத்தின் விதிகளில் மாற்றம் செய்து, சங்க உறுப்பினர்களுக்கு சங்கமே வேலையை ஒதுக்கீடு செய்யும் என்றும், தயாரிப்பு நிறுவனம் கொடுக்கும் சம்பளத்தை சங்கத்துக்கே செலுத்த வேண்டும் என்றும், அதில் 10 சதவீத சம்பளத்தை பிடித்தம் செய்த பிறகு, பாக்கி பணம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

இந்த நடைமுறையால் பல கலைஞர்கள் பாதிக்கப்பட்டனர்.  இதனை தட்டிக்கேட்ட எங்களைப் போன்றவர் களுக்கு வேலை வழங்க சங்க நிர்வாகிகள் மறுத்தனர். இந்த நிலையில், சங்க விதிகளுக்கு புறம்பாக, போட்டி சங்கம் தொடங்குவதாக, உறுப்பினர் பிரமிளா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எங்களை சஸ்பெண்ட் செய்தது. உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் சங்க செயலாளருக்கு கிடையாது.

எனவே சங்கத்தில் இருந்து எங்களை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவை சட்டவிரோதம் என அறிவித்து அதற்கு தடை விதிக்க வேண்டும்“ எனக் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த சென்னை 6 வது உதவி சிட்டி சிவில் கோர்ட்  நீதிபதி ராம. பார்த்திபன், மனிதாபிமான அடிப்படையில் இந்த கோரிக்கையை ஏற்று , மனுதாரர்களை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக தீர்ப்பளித்தார்.

- ஜோ.ஸ்டாலின்