Published:Updated:

டாஸ்மாக் விடுமுறை 8 நாட்களாக அதிகரிப்பு

Vikatan Correspondent

சென்னை, செப்.08,2011

டாஸ்மாக் மதுபான கடைகளுக்கான விடுமுறை 8 நாள்களாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.##~~##

சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசுகையில், "தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) சில்லறை விற்பனைக் கடைகளிலும், உணவக மதுபானக் கூடங்களிலும் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்த நாள், மகாவீர் ஜெயந்தி, வள்ளலார் நினைவு நாள் ஆகிய 5 நாட்களுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை.

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம் ஆகிய நாள்களிலும் இனி மதுபான விற்பனை இருக்காது.

மொத்தமாக ஆண்டுக்கு 8 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை இருக்காது," என்று அமைச்சர் தெரிவித்தார்.