Published:Updated:

விமானி- பொறியாளர் இடையே மோதல்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

Vikatan Correspondent
விமானி- பொறியாளர் இடையே மோதல்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
விமானி- பொறியாளர் இடையே மோதல்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
விமானி- பொறியாளர் இடையே மோதல்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னை: விமானிக்கும், பொறியாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏர்இந்தியா விமானத்தில் விமானியாக பணியாற்றி வருபவர் மணிக்லால். சென்னை விமான நிலையத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் கண்ணன்.

இன்று காலை விமானி மணிக்லாலுக்கும், பொறியாளர் கண்ணனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி மோதலில் முடிவடைந்தது. மணிக்லால் தாக்கியதில் கண்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து விமான நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் சமரசம் செய்தனர். பின்னர் இருவரும் தனித் தனியே காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான- பொறியாளர் இடையே ஏற்பட்ட மோதலால் டெல்லி வழியாக அமெரிக்கா செல்லும் ஏர்இந்தியா விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் விமானிக்கும், பொறியாளருக்கும் இடையே நடந்த மோதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.