Published:Updated:

சாமியாரின் சயனைடு மந்திரம்!

சாமியாரின் சயனைடு மந்திரம்!


க்ளைமாக்ஸ் விகடன்
சாமியாரின் சயனைடு மந்திரம்!
சாமியாரின் சயனைடு மந்திரம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சாமியாரின் சயனைடு மந்திரம்!
இரா.கோகுல்ரமணன்
சாமியாரின் சயனைடு மந்திரம்!
சாமியாரின் சயனைடு மந்திரம்!

சில திக் திகீர்... பக் பகீர் க்ளைமாக்ஸ்...

'இதுவே நம் கடைசி சந்திப்பு. இந்த உலகத்தின் க்ளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. ஏனெனில், தீய சக்திகள் இந்த உலகத்தை அழிக்கப் போகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க நாம் சொர்க்கத்துக்குச் செல்லப் போகிறோம்!' 1978-ம் வருடம் அமெரிக்காவில் 'ஜோன்ஸ் டவுன்' என்கிற பகுதியில் உள்ள ஆசிரமத்தில் 'மனிதக் கடவுள்' ஜிம்ஜோன்ஸ் கம்பீரக் குரலில் அறிவித்தபோது, கைதட்டி ஆரவாரித்தார்கள் அவனது பக்தர்கள்.

பெரிய பெரிய பீப்பாய்களில் இருந்த எழுமிச்சை ஜூஸில் சயனைடு கலந்தார்கள் சீனியர் சிஷ்யகோடிகள். 'ஒவ்வொருவரும் அமைதியாக வரிசையில் நின்று வாங்கி அருந்துங்கள். குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். வாழ்த்துக்கள்!' ஜோன்ஸ் ஒலிபெருக்கியில் ஒழுங்குபடுத்த, முண்டியடித்த கூட்டம் வரிசையில் வரத் துவங்கினார்கள். கூட்டம் கூட்டமாக சயனைடு ஜூஸ் குடித்துச் செத்து விழுந்தார்கள். சிலர் மரண பயத்தில் முரண்டுபிடிக்க, 'சைத்தான் கே பட்சா' என்று துப்பாக்கி

சாமியாரின் சயனைடு மந்திரம்!

முனையில் குடிக்கவைக்கப்பட்டார்கள். இறந்து விழுந்தவர்களை வரிசையாகத் தரையில் படுக்கவைத்தார்கள் சீனியர்கள். 'வேலை' முடிந்ததும் அவர்களும் ஜூஸ் குடித்து, மடிந்து விழுந்தார்கள். 'இதோ வருகிறேன்' என்றபடியே துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொண்டு, தானும் சரிந்தான் ஜோன்ஸ்.

சாமியாரின் சயனைடு மந்திரம்!

'சைக்கோ சாமியார்'பற்றித் தகவல் தெரிந்து போலீஸ் அவரச அவரசமாக ஹெலிகாப்டரில்வந்த போது, ஆசிரமத்தில் கிட்டத்தட்ட 1,000 பேர் செத்து விழுந்திருந்தார்கள்!

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் வாக்கோ (கீகிசிளி) என்கிற பகுதியில் ஆசிரமம் அமைத்திருந்தான் டேவிட் கொரேஷ். தொடர்ந்து 15 மணி நேரங்கள் பிரசங்கம் செய்தாலும் கூட்டம் கலையாமல் கேட்டுக்கொண்டு இருந்தது. சாத்தானிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க பக்தர்களுக்கு இயந்திர துப்பாக்கிகள் கொடுத்தான். போலீஸ் சும்மா இருக்குமா? சுற்றி வளைத்தது. சீடர்கள் சுட்டதில் நான்கு போலீஸ்காரர்கள் அவுட்.

சாமியாரின் சயனைடு மந்திரம்!

'அரசாங்கம் நம்மை அழிக்கப் பார்க்கிறது. யுத்தத்துக்குத் தயாராகுங்கள்!' என்று கொரேஷ் உத்தரவிட, ஆசிரமத்தில் இருந்து புல்லட்கள் சீறிப் பாய்ந்தன. எஃப்.பி.ஐ மற்றும் காவல் துறையினர் 51 நாட்கள் போராடிப் பார்த்தார்கள். கடைசியில் பீரங்கி டாங்குகள் மூலம் மயக்க மருந்து வாயுவை உள்ளே செலுத்தினார்கள். "போலீஸ் சாத்தான்கள் கையில் ஒருவர்கூட சிக்கிக்கொள்ளக் கூடாது. உலக வாழ்வு முடிந்துவிட்டது. நாம் சொர்க்கத்துக்குக் கிளம்புவோம்!" என்று கொரேஷ் சிஷ்யர்களுக்கு ஆணையிட, எல்லோரும் கும்பலாய் தீ வைத்துக்கொண்டு கருகிச் செத்தார்கள்!

சாமியாரின் சயனைடு மந்திரம்!
சாமியாரின் சயனைடு மந்திரம்!