Published:Updated:

பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்!

பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்!


க்ளைமாக்ஸ் விகடன்
பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்!
பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்!
இரா.மன்னர்மன்னன், அ.ஆதித்யன், யா.நபீசா
பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்!

கற்பனைக்கும் எட்டாத க்ளைமாக்ஸ்கள் நிரம்பியது பிரபலங்களின் வாழ்க்கை!

பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்!

நெருங்கிய நண்பர்கள் கடைசி நேரத்தில் குழி பறித்தது, இறப்பதற்கு 42 மணி நேரங்களுக்கு முன்பு காதலியைத் திருமணம் செய்துகொண்டது எனப் பல சுவாரஸ்யத் திருப்பங்கள் நிறைந்தது அடால்ஃப் ஹிட்லரின் வாழ்க்கை. பலரின்

உயிரை கொடூரமாகப் பறித்தவருக்கு, அன்பு மனைவியின் உயிர் தன் கண் முன் பிரிவதைக் காணவேண்டிய பரிதாப சூழ்நிலை. ரஷ்யப் படை பெர்லினை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. நம்பியவர்கள் எல்லாம் கடைசி நிமிடத்தில் கைவிட்டுவிட்டார்கள். 'இனி போரிட்டு ஜெயிக்க முடியாது!' என்பது ஹிட்லருக்குத் புரிகிறது. தன்னுடன் இருந்த அதிகாரிகளிடம், 'எங்காவது போய்விடுங்கள்' என்று உத்தரவிடுகிறார். காதலி ஈவா ப்ரவுனுடன் தனியறைக்குச் செல் லும் ஹிட்லர், காதலியின்விருப்பத் துக்கு இணங்க அவரைத் திருமணம் செய்துகொள்கிறார். சிறிது நேரத்தில் ரஷ்யப் படைகள் 300 மீட்டர் தூரத்தில் நெருங்கிவிட்டன. ஈவா ப்ரவுன் சயனைடு சாப்பிட்டு வாயில் நுரை தள்ளி சுருண்டு விழுந்தார். ஹிட்லரோ துப்பாக்கியை வாயில் வைத்து, மூளை சிதறும்படி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்துப்போனார். இவர்கள் மட்டுமல்ல; தோட்டக்காரர், சமையல்காரி, கார் ஓட்டுனர் போன்றோர் ஹிட்லரின் இறுதி மூச்சு பிரியும் வரை கூடவே இருந்து, கூடவே சேர்ந்து தங்கள் உயிரையும் மாய்த்துக்கொண்டார்கள். வாழ்நாள் முழுக்க கொடூரமான சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் கடைசி நேரத்தில் தற்கொலை முடிவை எடுப்பதற்கு வேறொரு காரண மும் இருந்தது.

பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்!

ரஷ்யப் படைகள் ஹிட்லர் தங்கியிருந்த நிலவறையை நெருங் குவதற்கு முந்தைய நாள்தான் இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினியும் அவரது மனைவியும் அவ்வூர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களால் சுட்டுக்கொள்ளப்பட்டு, ஆடைகளை அவிழ்த்து, தலைகீழாக தொங்க விடப்பட்டார்கள். அவர்களது பிணங்களை பொது மக்கள் கல்லால் அடித்து தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். தான் ரஷ்யப் படையினரிடம் சிக்கினால் தனக்கும் இதே கதிதான் என உணர்ந்ததால், தற்கொலை முடிவெடுத்தார் ஹிட்லர். இறுதியில் ரஷ்யப் படைகளால் ஹிட்லரின் சாம்பலை மட்டுமே கைப்பற்ற முடிந்தது!

பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்!

புகழின் உச்சத்தில் இருந்தபோது திடீரென ஒருநாள் ஒரு நடிகையின் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார் புரூஸ்லீ. போஸ்ட்மார்டம் அறிக்கை, 'தவறான மாத்திரைகளை சாப்பிட்டதால் புரூஸ்லீ மூளை பாதிக்கப்பட்டு இறந்தார்' என்று மட்டுமே சொன்னது. இதுவரை காரணம் யாருக்கும் தெரியாது!

பாப் இசைக் கடவுள் மைக்கேல் ஜாக்சனின் க்ளைமாக்ஸ் சமீபத்திய மாபெரும் அதிர்ச்சி. இவர் இறப்புப் பற்றிய விசாரணையில் 'வலி நிவாரணிகளை அதிகம் சாப்பிட்டதால் இறந்தார்' என்று மருத்துவர்கள் சொன்னாலும்,ஜாக்சனின் ரசிகர்கள் 'மரணத்தில் மர்மம்' என்றே சொல்லி வருகின்றனர்!

பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்!

தியாகராஜ பாகவதர்... தமிழ்த் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார். ஒரு முறை கச்சேரிக்குச் சென்ற பாகவதர் அன்று வசூலான ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தை ரயிலில் வரும்போது எண்ணிக்கொண்டே வந்தார். அவற்றைச் சரியாக ஜிப்பாவுக்குள் வைக்காததால் கழிப்பறைக்குப் போகும்போது உள்ளே விழுந்துவிட்டது. 'இதைப் போய் எடுப்பதா' என்று அவ்வளவு பணத்தையும் அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டார் பாகவதர். ரயிலில் இருந்து இறங்கியதும் தெரிந்த ஒருவரிடம் கைச் செலவுக்கு 50 ரூபாய் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். பிறகு, அந்த 50 ரூபாய் பணத்தை பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு நகைப் பெட்டியில் வைத்து திருப்பிக் கொடுத்தார். இப்படிசெல்வச் செழிப்போடு வாழ்ந்த பாகவதர் லட்சுமிகாந்தன் கொலை வழக்குக்குப் பின், சொத்துக்களை இழந்து கண் பார்வை இழந்து, கடும் வறுமையில் வாடினார். பசி போக்க, ஒரு கோயில் வாசலில் துண்டேந்திப் பாடிய பாகவதர், இறுதி காலத்தில் ஒரு பிச்சைக்காரரைப்போல இறந்தார்!

பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்!

புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ரேடியம் என்னும் பொருளை கண்டுபிடிப்பதற்காக தன் வாழ்க்கையையே அர்பணித்த மேரி கியூரியின் கடைசி கால வாழ்க்கை மிகக் கொடுமையானது. போலந்து நாட்டில் 1867-ல் பிறந்த இவர், அந்த நாட்டில் இருந்த கடுமையான கலாசாரக் கட்டுப்பாடுகளையும் மீறி அறிவியலின் மீது கொண்ட ஆர்வத்தால் பாரீஸ§க்கு வந்தார்.பட்டப் படிப்பை முடித்த பிறகு, தனது கணவருடன் பேரியம், பிஸ்மத் போன்றவற்றைக்கொண்டு ஆராய்சி நடத்திக்கொண்டு இருக்கும்போதுதான் யுரேனியத்தைவிட பல மடங்கு சக்தி வாய்ந்த ரேடியம் என்ற பொருளைக் கண்டறிந்தார். அதற்காக 1903-ல் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேரி மற்றும் அவருடைய கணவரான பியரி கியூரி இருவரும் ஆய்வகங்களில் வேலை செய்தாலும் முதலில் கதிர்வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டது பியரிதான். கால் வலியாலும், உடல் நடுக்கத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்ட அவர் 1906-ல் குதிரை வண்டியில் செல்லும்போது அதிலிருந்து விழுந்து இறந்துபோனார்!

பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்!

இரண்டு பெண் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டே பல பல்கலைகழகங்களில் பாடம் எடுத்துவந்தார் கியூரி. மிகவும் ஆபத்து மிகுந்தரேடி யம் சால்ட் என்னும் பொருளை மாணவர்களுக்கு காண்பிப்பதற்காக எப்போதும் அதைத் தன் பாக் கெட்டில் வைத்திருப்பார். சோதனைகளுக்காக தன்னையே பயன்படுத்திக்கொண்டவருக்கு லுக்கிமியா என்னும் தோல் புற்றுநோய் வந்துவிட்டது. அதையும் தாண்டி, தொடர்ந்துத் தன் உடலை கண்டுபிடிப்புகளுக்கான சோதனைக் களமாகவே பயன்படுத்தினார். அவரது வாழ்க்கையில் இறுதி கட்டம் மிகுந்த வலிகளும், வேதனைகளும் நிறைந்தது. கேன்ஸர் கட்டிகளால் கடும்பாதிப்புகளுக்கு உள்ளான கியூரி, 1934-ல் இறந்துபோனார். 1935-ல் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, அதைக் காண்பதற்கு கியூரி இல்லை. ஆனாலும், அவரது கண்டுபிடிப்புதான் இன்று பல கோடி மக்களின் வலிக்கு நிவாரணம் அளித்துக்கொண்டு இருக்கிறது!

பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்!

சதாம் ஹ§சேன்... அமெரிக்காவை மூர்க்கமாக எதிர்த்த அதே நேரத்தில் சொந்த நாட்டு மக்களையும் வதைத்த சர்வாதிகாரி. அத்தனை ஆர்ப்பாட்டமாக, ஆடம்பரமாக ஆட்சி செய்த சதாம் தனது இறுதி நாட்களில் மிகக் குறுகலான ஒரு பதுங்குக் குழியில் தனது நாட்களை கழிக்க வேண்டிய நிலை. முறையான விசாரணைகளுக்கு முன்னரே தூக்கில் தொங்கவிடப்பட்டார் சதாம்!

பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்!
பிரபலங்களின் இறுதி நிமிடங்கள்!