Published:Updated:

Y2K க்ளைமாக்ஸ்?!

Y2K க்ளைமாக்ஸ்?!


க்ளைமாக்ஸ் விகடன்
Y2K க்ளைமாக்ஸ்?!
Y2K க்ளைமாக்ஸ்?!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Y2K க்ளைமாக்ஸ்?!
ந.வினோத்குமார்
Y2K க்ளைமாக்ஸ்?!
Y2K க்ளைமாக்ஸ்?!

ருடம் 2000... உலகப் பிரபலமாக Y2K. உலகத்தையே ஆட்டிப் படைத்த இந்தப் பிரச்னையின் க்ளைமாக்ஸ் என்ன தெரியுமா? தெரிந்துகொள்ளுமுன் சின்ன நினைவூட்டல்...

பொதுவாக கம்ப்யூட்டரில் வருடத்தைக் குறிப்பிட இரண்டு தசம எண்களைத்தான் (1976 என்பதை '76 என்று!) பயன்படுத்தினார்கள். 1999 வரையிலான வருடங்களை சுருக்கமாக 96, 97, 98, 99 என்றுதான் குறிப்பிட்டார்கள். ஆனால், 2000 வருடம் பிறந்தபோது, நான்கு தசம எண்கள் வந்துவிடுகிறது. இதற்கு ஏற்றாற்போல் கணிப்பொறிகள் புரொகிராம் செய்யப்படவில்லை. ஆகவே, கணினிகள் மீண்டும் தானாகவே 1900 என நினைத்து 00, 01, 02... 96, 97, 98, 99 என்று கணக்கிடத் தொடங்குமோ என்று கிலி கிளப்பினார்கள் சாஃப்ட்வேர் ஆசாமிகள். 1958லேயே இப்பிரச்னைப்பற்றி பாப் பர்னெர் என்பவர் ஆய்வு மேற்கொண்டார்.

மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் (ஜனவரி 0, 1900 என்று தேதி காட்டியது), 'சி' புரொகிராமிங் (ஜனவரி 1, 19100 என்று தேதி காட்டியது), ஜாவா ஸ்க்ரிப்ட் (சி போலவே) போன்ற சில மென்பொருள்களில் மட்டுமே இந்தத் தேதி பிரச்னை எழுந்தது. பல வங்கிகள் பயந்து போய் கம்ப் யூட்டர் பரிவர்த்தனைகளைநிறுத் திவிட்டு, மனிதர்களை பயன்படுத் தியது. நார்வே, பின்லாந்து போன்ற நாடுகள் தங்களின்தேசிய அடையாள அட்டைகளை குடி மக்களிடம் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டு, அவர்கள் எந்த நூற்றாண்டில் பிறந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டு மீண்டும் விநியோகித்தது.

தேதிகளைக் குறிப்பிடுவதில் நாட்டுக்கு நாடு வித்தியாசம் உண்டு. சில நாடுகளில் வருடங்கள்-மாதங்கள்-தேதி என்றும், சில நாடுகளில் மாதங்கள்-வருடங்கள்-தேதி என்றும், இன்னும் சில நாடுகளில் தேதி-வருடங்கள்-மாதங்கள் என்றும், இந்தியா போன்ற நாடுகளில் தேதி-மாதங்கள்-வருடங்கள் எனப் பலவிதமாகக் குறிப்பிடப்படுகிறது. இதனால் எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஒரு புரொகிராமை உருவாக்க முடியவில்லை. 'இதை சரிசெய்யவே முடியாது. உலகின் மொத்த கம்ப்யூட்டர்களும் ஓய்ந்துவிடும். இதுவரை சேகரித்தத் தகவல்கள், ஆவணங்கள் எல்லாமே அவுட். வங்கிக் கணக்கு எல்லாம் கோயிந்தா. மீண்டும் காகிதத்தில்தான் கணக்கு வழக்குப் பார்க்க வேண்டும். எல்லாமே புட்டுக்கும்!' என்கிறரீதியில் ஆளாளுக்கு வீதியில் நின்று பீதி கிளப்பினார்கள்.

Y2K க்ளைமாக்ஸ்?!

ஆனால், 2000 பிறந்த கணத்தில் எந்த வீபரித வில்லங்கமும் அரங்கேறவில்லை. 'ஹாப்பி நியூ இயர்' என்று வாழ்த்தியபடி கணினிகள் தேமேவென்று பணி செய்துகிடந்தன. அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற கம்ப்யூட்டர்களை பெருமளவில் பயன்படுத்திய நாடுகளில், பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் வருடங்களை நான்கு தசம எண்களாக குறிப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். இதனால், அங்கே மிக சொற்ப அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டது. கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகம் இல்லாத இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் அப்படி ஒரு பிரச்னை வந்ததாகவே தெரியவில்லை.

படுபயங்கரமாகச் சித்தரிக்கப்பட்ட Y2K வில்லன், கைப்புள்ள கணக்காக புஸ்ஸென்று ஆகிவிட்டது!

Y2K க்ளைமாக்ஸ்?!
Y2K க்ளைமாக்ஸ்?!