Published:Updated:

'ஆ'யுதம்!

'ஆ'யுதம்!


க்ளைமாக்ஸ் விகடன்
'ஆ'யுதம்!
'ஆ'யுதம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'ஆ'யுதம்!
இரா.மன்னர்மன்னன், யா.நபீசா
'ஆ'யுதம்!
'ஆ'யுதம்!

ணு ஆயுதங்கள்... ஒரு விசை அழுத்தத்தில் உலகையே காலி செய்யக் கூடிய சாத்தான்கள். விளைவுகளை அறிந்து, அதை அனுபவித்தப் பிறகும் மனிதன் தனக்குத்தானே சேகரித்து வைத்துக்கொள்ளும் கொள்ளி. அணு ஆயுதத் திறனில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியாவின் அணு ஆயுதங்களைச் சரியாகப் பொருத்தினால், ஒட்டுமொத்த உலகையும் ஒரு முறை அழித்துவிடலாம்!

'அமெரிக்காவிடம் உள்ள அணு ஆயுதங்களால் மட்டும் இந்த உலகத்தை 27 முறை முழுவதுமாக எரிக்க முடியும். உலகெங்கும் உள்ள அணு ஆயுதங் களைப் பகிர்ந்துவைத்து... ஒன்றன்பின் ஒன்றாக வெடித்தால், உலகை 100 முறை முழுவதுமாக எரிக்க முடியும். இந்த உலகமே கொடூரமான அணு ஆயுதங்களால் நிரம்பியிருக்கிறது. உலகில் குவிந்து கிடக்கும் ஒட்டுமொத்த அணு ஆயுதங்களையும் ஒரே நேரத்தில் வெடிக்கவைத்தால், சூரிய குடும்பத்தின் அமைப்பே மாற வாய்ப்பு இருக்கிறது' என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஒருவேளை மூன்றாம் உலக யுத்தம் என்று ஒன்று உருவானால் இந்த உலகில் கரப்பான் பூச்சிகளைத் தவிர, வேறு எந்த உயிரும் இருக்காது. ஒரு தீவிரவாத இயக்கமோ, ஒரு சைக்கோ கொலையாளியோ அணுகுண்டையும் அதன் தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்தால், அன்றைய தினம் உலகின் க்ளைமாக்ஸ்தான்!

'ஆ'யுதம்!

அணுகுண்டின் அழிப்புக்கு என்றென்றைக்குமான உதாரணம் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி. 1945-ல் வீசப்பட்ட லிட்டில் பாய், ஃபேட் மேன் என்ற இரண்டு அணுகுண்டுகள் மட்டும் முதல் இரண்டு மாதங்களிலேயே ஹிரோஷிமாவில் 90ஆயிரம் முதல் 1 லட்சத்து 66ஆயிரம் மக்களையும், நாகசாகியில் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் மக்களையும் கொன்று குவித்தது. இதில் அணுக்கதிரின் ஒளியாலும் சத்தத்தாலும் மட்டும் அதே இடத்தில் 60 சதவிகித மக்கள் இறந்துவிட்டார்கள். பிறகு, அதன் பாதிப்பால் இறந்தவர்கள் போக, காதில் இருந்து திடீரென ரத்தம் வருவது, தலைமுடி தானாக உதிர்வது, தோல் உரிவது, மிக மோசமான குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பது என ஜப்பான் சுடுகாடு ஆனது. 50 வருடங்களைக் கடந்த பின்னும், இன்னும் அங்கு கதிர்வீச்சின் தாக்கம் இருக்கிறது. இரண்டு ஊர்களிலும் இப்போதும் சிறு புல்கூட முளைப்பது இல்லை. உலகின் பல இடங்களில் அணுக்கதிர்வீச்சு பாதிப்புகள் இருந்தாலும், அவை எல்லாம் மனிதனின் கட்டுப்பாட்டை மீறி நடந்தவை. மனிதர்களாலேயே நேரடியாக பாதிப்புகளுக்கு உள்ளான நாடு ஜப்பான்!

'ஆ'யுதம்!

'ஒரு அணுகுண்டு தயாரிக்கும் செலவில் 3.5 லட்சம் ஆரம்பப் பள்ளிகளைக் கட்டலாம்' என்றார் இந்திரா காந்தி. 'இதுவரை ஆயுதம் வாங்கிய காசில் அரிசி வாங்கி இருந்தால் இந்த நாட்டில் பசியே இருந்திருக்காது' என்பது சினிமா வசனம். இரண்டுமே நடக்கவில்லை. வல்லரசு கோஷமும் ஓயவில்லை!

'ஆ'யுதம்!
'ஆ'யுதம்!