Published:Updated:

உங்கள் இறந்த நாள் எது?

உங்கள் இறந்த நாள் எது?


க்ளைமாக்ஸ் விகடன்
உங்கள் இறந்த நாள் எது?
உங்கள் இறந்த நாள் எது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உங்கள் இறந்த நாள் எது?
இரா.மன்னர்மன்னன், யா.நபீசா
உங்கள் இறந்த நாள் எது?

சில க்ளைமாக்ஸ் துளிகள்...

உங்கள் இறந்த நாள் எது?

சிவாஜி இறப்பதாக முடியும் 'வசந்த மாளிகை' படம் முதலில் ஓடவில்லை. பின்பு, 'இன்னும் கொஞ்சம் லேட் ஆகியிருந்தாலும் செத்துருப்பார்' என்று டாக்டர் சொல்வதாக எடுத்து, சிவாஜி பிழைப்பதாக க்ளைமாக்ஸை மாற்ற... படம் சூப்பர் ஹிட்!

ஒரு படத்தின் முடிவு, அந்தப் படத்தை முடிவே இல்லாமல் திரையரங்குகளில் ஓட்டிக்கொண்டு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அமெரிக்காவில் உள்ள தியேட்டர் ஒன்றில் 1975-லிருந்து ஓடிக்கொண்டிருக்கிறது 'ராக்கி' என்ற பேய்ப் படம். மனிதனை பேய்கள் எவ்வாறு எல்லாம் கொடுமைப்படுத்துகின்றன என்பதுதான் கதை. உறையவைக்கும் க்ளைமாக்ஸால் இப்போதும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது இந்தப் படம்.

 

இந்தியாவிலும் அப்படி ஒரு படம் உண்டு. ஷாரூக், கஜோல் நடித்த 'தில் வாலே துல்ஹனியா லே ஜாயாங்கே' படம், 1995-ம் வருடம், அக்டோபர் 20-ல் ரிலீஸ் ஆனது. பிரிந்துவிட்ட ஷாரூக்கும் கஜோலும் ரயில்வே ஸ்டேஷனில் இணைகிற க்ளைமாக்ஸ், அப்போது அத்தனை ரசிகர்களை கலங்கி அழ வைத்தது. அன்று ரிலீஸ் ஆன அந்தப் படம், இன்று வரை மும்பையில் உள்ள மராட்டா மந்திர் என்கிற தியேட்டரில் 'ஒரு ஷோ'வாக ஓ...ஓடிக்கொண்டே இருக்கிறது!

'பிரதி மாதம் தொடர்ந்து பணம் கட்டுங்கள், உங்களுக்கு அழகான வீடு

உங்கள் இறந்த நாள் எது?

கொடுப்போம்' - என்று ஒரு பெரிய நிறுவனம் சொன்னதைக் கேட்டு, அமெரிக்க மக்கள் கேள்வி எதுவும் கேட்காமல் கண்ணைக் கட்டிக்கொண்டு பணம் கட்டினார்கள். ஏப்ரல் 1-ம் தேதி பணம் கட்டியவர்களுக்கு ஒரு பிளாஸ்டிக் பொம்மை வீட்டை கூரியரில் அனுப்பிவைத்தது அந்த நிறுவனம். இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற மக்களிடம், 'அவர்கள் சொன்னதைத்தான் செய்துவிட்டார்களே!' என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்தது நீதித்துறை. ஒவ்வொருவரும் கட்டிய பணம் இந்திய மதிப்பில் எட்டு லட்சத்துக்கும் மேல்!

உங்கள் இறந்த நாள் எது?

'உலகில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காரணம் உடலுறவில் திருப்தி கிடைக்காததே!' - என்றார் மனநலத் துறையின் தந்தை சிக்மண்ட் ஃப்ராய்டு. உடலின் தேவை முழுவதுமாக நிறைவேறாதபோது, அது மனதின் எண்ணங்களை பெருமளவில் பாதிக்கிறது என்பது அவரது ஆய்வு. 'சைக்கோ குற்றவாளிகளில் பெரும்பாலானோர் உடலுறவுக்கான சாத்தியம் குறைவானவர்களாகவோ அல்லது அதில் உச்சகட்டத்தை அடைய முடியாதவர்களாகவோதான் இருக்கிறார்கள்' என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ!

உங்கள் இறந்த நாள் எது?

'யாருக்கும், தான் இறக்கும் க்ளைமாக்ஸ் நாள் தெரியாது. ஆனால், அதற்கும் நாள் குறித்துவிடுகிறது 'டெத் வெப்சைட்' எனப்படும் இணையதளங்கள். நமது உடல் எடை, உயரம், வாழும் நாடு, புகை, மதுப் பழக்கம், வயது எனப் பல கேள்விகள் கேட்கிறார்கள். பூர்த்திசெய்தால், நீங்கள் இந்த வருடம் இந்தத் தேதியில் அவுட் என்று 'தகவல்' சொல்கிறார்கள்!

கடவுளர்கள், கடவுளின் சீடர்கள் என்று

உங்கள் இறந்த நாள் எது?

சொல்லப்படுபவர்கள்கூட தங்கள் வாழ்வை பாஸிட்டிவ் க்ளைமாக்ஸ§டன் முடித்துக்கொள்ளவில்லை. விஷ்ணுவின் அவதாரம் என்று வணங்கப்படும் ராமர் சரயு நதியிலே குதித்து இறக்கிறார். கிருஷ்ணரோ காற்றிலே திசைமாறி வந்த அம்பினால் சாகிறார். இயேசு கிறிஸ்துவின் துயர் மிகுந்த மரணம் அனைவரும் அறிந்ததே. தவிர, இயேசுவின் 13 சீடர்களும் கொடூரமான முறையில்தான் இறந்திருக்கின்றனர்!

உங்கள் இறந்த நாள் எது?
உங்கள் இறந்த நாள் எது?