Published:Updated:

மச்சி.. பஜ்ஜி... சொஜ்ஜி!

மச்சி.. பஜ்ஜி... சொஜ்ஜி!


க்ளைமாக்ஸ் விகடன்
மச்சி.. பஜ்ஜி... சொஜ்ஜி!
மச்சி.. பஜ்ஜி... சொஜ்ஜி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மச்சி... பஜ்ஜி...சொஜ்ஜி...
ரீ.சிவக்குமார்
மச்சி.. பஜ்ஜி... சொஜ்ஜி!
மச்சி.. பஜ்ஜி... சொஜ்ஜி!

மிழ் சினிமாக்களில் இடைவேளையில் பாப்கார்ன் வரும். காதல் வந்தால் டூயட் வரும். அதைப்போல க்ளைமாக்ஸ் என்றால் போலீஸ் வரும். கறுப்பு வெள்ளை காலகட்டத்தில் இருந்தே அக்கிரமங்களை அநாயாசமாகச் செய்வார் வில்லன். அவரின் ஒவ்வொரு முயற்சிகளையும் முறியடிப்பது நாயகனின் வேலை. மூக்கில் மூன்றாவது முறையாக குத்து வாங்கி ரத்தம் வரும்போது, வில்லனைத் துவைத்து தொங்கப்போடுவார் நாயகன். சாகக்கிடக்கும் வில்லனைத் தூக்கிப் போக ஆம்புலன்ஸ் வர வேண்டும். ஆனால், 'பீப்பீ' ஊதிக்கொண்டு போலீஸ் வரும்.சமயங் களில் போலீஸிடம் சிக்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக வில்லன் திருந்திவிடும் அதிசயமும் நடப்பது உண்டு. ஆனால்; இப்போது மதுரை, அரிவாள், தாடி, கைலி அணிந்த படங்களில் வில்லன் சாகும்வரை போலீஸ்

வருவதே இல்லை. 'மதுர' சினிமாக்களில் மட்டும் போலீஸ§க்கு க்ளைமாக்ஸில் மட்டுமல்ல... எங்குமே வேலை இல்லை!

பழிக்குப் பழி வாங்கும் கதைகளின் க்ளைமாக்ஸ் எப்போதும் டெரராக இருக் கும். வில்லன் கும்பலிடம் அடி வாங்கி ஹீரோ மயங்கிக்கிடப்பார். வில்லனின் ஆட்கள் 'தங்கச்சியை ரேப் செய்தது, அப்பாவை அடித்தது, அம்மாவை கைமா பண்ணியது, ஆயாவை பாயா செய்தது' போன்றவை நாயகனின் கண்களில் நிழலாடும். உடனே 10 ஆயிரம் வாட்ஸ் பவர் கிடைக்கும். அப்புறம் என்ன? வெற்றி பெறும்வரை வெறியோடு அடிதடிதான்!

மச்சி.. பஜ்ஜி... சொஜ்ஜி!

சமயங்களில் ஹீரோவின் அம்மா, தங்கை, காதலியைக் கடத்திவிடுவார் வில்லன். மலை உச்சியில், குடோனில் என விதவிதமான இடங்களில் அவர்களைக் கட்டிப்போட்டு சித்திரவதை செய்வார் வில்லன். மோட்டார் பைக்கால் கதவை உடைத்தோ, கண்ணாடி ஜன்னலுக்குள் எகிறிக் குதித்தோ ஹீரோ என்ட்ரி கொடுப்பார். ஹீரோ டபுள் ஆக்டாக இருந்தால், கட்டாயம் ஒரு ஹீரோ கயிற்றால் கட்டப்பட்டு இருப்பார். ஹீரோவோ, அவரது உறவினர்களோ கயிற்றை அவிழ்த்தவுடன் கூட்டணி அமைத்து கும் கும் என்று குத்துவார்கள்.

மச்சி.. பஜ்ஜி... சொஜ்ஜி!

ஷங்கர் படத்து க்ளைமாக்ஸ் என்றால் மைக் நிச்சயம். சட்டத்தை மதிக்காதவர்கள், சட்டை பட்டனைச் சரியாகப் போடாதவர்கள், சாக்ஸை துவைக்காதவர்கள் அனைவருக்கும் தண்டனை நிச்சயம். 'சிங்கப்பூரு எப்படி முன்னேறிடுச்சு, சிலுக்குவார்பட்டி எப்படி பின்னேறிடுச்சு?' என்று ஹீரோ கேள்விகளால் சமூக அக்கறையை வெளிப்படுத்துவார்.

மச்சி.. பஜ்ஜி... சொஜ்ஜி!

உடனே, 'கதாநாயகன் செய்தது சரிதானா?' என்று மீடியாவாலாக்கள் மைக்கைத் தூக்கிக்கொண்டு கிளம்பி விடுவார்கள். மக்கள் கருத்து சொல்லி முடிப்பதற்குள் ஒரு டீ, தம் அடித்துவிட்டு வந்துவிடலாம்.

டி.ராஜேந்தர் படங்களில் எல்லாம் ஒரே க்ளைமாக்ஸ்தான். காதல் ஜோடிகளைச் சேர்த்துவைக்கவோ, தன் தங்கச்சி தப்பாகக் கல்யாணம் கட்டிக்கொண்ட வில்லனைத் திருத்துவதற்காகவோ (டி.ராஜேந்தரின் தங்கச்சி எப்போதுமே வீணாய்ப்போனவனை மட்டுமே விவாகம் செய்துகொள்வார்!) தன் இன்னுயிரைத் தியாகம் செய்வார் டி.ஆர். அதற்கு முன் அவர் பேசும் 'மச்சி பஜ்ஜி சொஜ்ஜி' வசனங்களுக்கு ஒரு காலத்தில் ரசிகர் கூட்டம் இருந்தது. விஜய டி.ஆர் சொஜ்ஜி வசனங்களால் துவம்சம் செய்வார் என்றால் விஜயகாந்த் 'கருத்து' சொல்லியே காலி

மச்சி.. பஜ்ஜி... சொஜ்ஜி!

பண்ணுவார். பாகிஸ்தான் தீவிரவாதியோ, பக்கத்து வீட்டு அங்கிளோ விஜயகாந்த் பேசினால், தலைகுனிந்து ஏற்றுக்கொள்வார்கள். உச்சகட்டமாக ஒரு படத்தில் மஞ்சள் பையில் அரிவாளைச் சொருகிக்கொண்டு பாகிஸ்தான் கிளம்புகிறேன் என்று பதறவைத்தார் கேப்டன்.

இப்போதைய ட்ரெண்டில் பின்னி மில்லில் அடைபட்டுக்கிடக்கும் தமிழ் சினிமாவை யாராவது விடுதலை செய்தால் நலம்!

மச்சி.. பஜ்ஜி... சொஜ்ஜி!
மச்சி.. பஜ்ஜி... சொஜ்ஜி!