Published:Updated:

எங்கே இருக்கிறார் நேதாஜி?

எங்கே இருக்கிறார் நேதாஜி?


க்ளைமாக்ஸ் விகடன்
எங்கே இருக்கிறார் நேதாஜி?
எங்கே இருக்கிறார் நேதாஜி?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எங்கே இருக்கிறார் நேதாஜி?
கார்த்திகாகுமாரி
எங்கே இருக்கிறார் நேதாஜி?
எங்கே இருக்கிறார் நேதாஜி?

எல்லோருடைய வாழ்க்கைக்கும் மரணம்தான் க்ளைமாக்ஸ். ஆனால், சில தலைவர்களின் மரணப் புதிர் முடிச்சு இன்னும் அவிழாமல் இருப்பதால், அது க்ளைமாக்ஸா, இன்டர்வெல்லா என்றே இன்னும் குழப்பங்கள்!

அலெக்ஸாண்டர்: கி.மு-வில் வாழ்ந்த இந்த மன்னருக்கு 33 வயதுக்குள்ளாகவே எக்கச்சக்க வெற்றிகள். வரிசையான சண்டைகள் அவரது படையினரை சோர்வடைய வைத்தன. கிரேக்கத்துக்கு திரும்பும் வழி எங்கும் கலவரங்களை அடக்குவதற்கும், ஏற்கெனவே வெற்றிபெற்ற இடங்களில் நியமித்து இருந்த கவர்னர்கள் தவறு செய்து இருந்தால் தண்டிப்ப தற்குமே பொழுதுபோயிற்று.பாபி

லோனில் உள்ள நெபுகத் நெஸார் அரண்மனையில் அலெக்ஸாண் டர் மரணம் அடையும்போது அவருக்கு வயது 33. மலேரியா, டைஃபாய்டு போன்ற உடல்நிலை சார்ந்த காரணங்கள் சொல்லப் பட்டாலும் விஷம் கொடுக்கப் பட்டு இறந்திருப்பார் என்பதுதான் பெரும்பாலானவர்களின் நம்பிக்கை!

எங்கே இருக்கிறார் நேதாஜி?

சுபாஷ் சந்திரபோஸ்: காந்திக்குச் சமமாக மதிக்கப்பட்ட நபர். இந்திய சுதந்திரத்துக்காக இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷை எதிர்த்த நாடுகளிடம் உதவி கேட்கச் சென்றார். 1945-ம் வருடம், ஆகஸ்ட் 18-ம் தேதி டோக்கியோவுக்குப் பறந்துகொண்டு இருந்த போஸ், தாய்வானுக்கு மேல் பறக்கும்போது வானிலேயே விமானம் வெடித்து இறந்தார் என்று ஒரு தகவல். ஆனால், 1999-2005 சமயத்தில் நடைபெற்ற நீதிபதி முகர்ஜி தலைமையிலான விசாரணையில் குறிப்பிட்ட தேதியில் அப்படி ஒரு விமான விபத்தே நடக்கவில்லை எனச் செய்திகள் கிடைத்தன. அது மட்டுமல்ல; 'போஸின் சாம்பல்' என்று ஜப்பானில் வைக்கப்பட்டுஇருந்தது அவருடைய சாம்பலே இல்லை என்றும் அறிவித்தது முகர்ஜி குழு. இன்னமும் போஸ் எங்கோ வெளிநாட்டில் உயிருடன்தான் இருக்கிறார் என்று நம்புபவர்கள் இருக் கிறார்கள்!

எங்கே இருக்கிறார் நேதாஜி?

நெப்போலியன் போனபார்ட்: 'முடியாது என்ற வார்த்தையே என் அகராதியில் கிடையாது' என்று சொன்ன தன்னம்பிக்கை மனிதன். தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து வாட்டர்லூ போரில் தோற்றுப்போய், சிறையில் அடைக்கப்பட்ட நெப்போலியன் இறந்து பிணமாகத்தான் வெளியே வந்தார். சாப்பாட்டில், சிறைச் சுவர்களில் விஷம் அப்பி இருந்ததாக தகவல் சொல்லப்பட்டாலும் அவருடைய இறப்பு இன்னும் புரியாத புதிர்தான்!

எங்கே இருக்கிறார் நேதாஜி?
எங்கே இருக்கிறார் நேதாஜி?