Published:Updated:

உலகின் முதல் ஸ்ட்ரைக்!

உலகின் முதல் ஸ்ட்ரைக்!


க்ளைமாக்ஸ் விகடன்
உலகின் முதல் ஸ்ட்ரைக்!
உலகின் முதல் ஸ்ட்ரைக்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உலகின் முதல் ஸ்டிரைக்!
கார்த்திகா
உலகின் முதல் ஸ்ட்ரைக்!
உலகின் முதல் ஸ்ட்ரைக்!

உலகின் பிரபலமான வேலை நிறுத்தங்களும், அவற்றின் க்ளைமாக்ஸ்களும்...

முதல் வேலை நிறுத்தம் (எகிப்து):

பிரமிட் கட்டும் தொழிலாளர்கள் செய்ததுதான் முதல் வேலை நிறுத்தம். கி.மு 1152-ம் வருடம் நடந்த போராட்டம் அது. 'பிரமிடுகள் கட்டிக்கொண்டு இருந்த தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் கோதுமை ஒழுங்காக வந்து சேரவில்லை' என்பது புகார். சொந்தக் காசில் உணவை வாங்க வேண்டிய கட்டாயம். சுத்தியலைத் தூக்கிப்போட்டுவிட்டு அந்த ஏரியாவை காலி செய்ய ஆரம்பித்தார்கள். அடுத்தடுத்து இப்படி நடந்த வேலை நிறுத்தப் போராட்டங்கள் கோதுமை மூட்டை மூட்டையாக வந்து இறங்கியதும் ஓய்ந்துபோனது. தொழிலாளர்களுக்குள்ளேயே தொழிலாளர் தலைவர்கள் முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் இந்தப் போராட்டத்தில்தான்!

தபால் ஊழியர்கள் போராட்டம் (அமெரிக்கா):

கிட்டத்தட்ட ஏழரை லட்சம் பேர் கலந்துகொண்ட உலகின் மிகப் பெரிய போராட்டங்களுள் இதுவும் ஒன்று. இரண்டு வாரங்கள் நீடித்த இதன் உச்சத்தில், வேறு வழியின்றி ராணுவத்தினரை தபால் நிலையங்களில் வேலை செய்யவைத்தார் அப்போதைய அதிபர் நிக்ஸன். ஊதிய உயர்வு உள்ளிட்ட அவர்கள் கேட்ட எல்லா விஷயமும் கிடைத்த பிறகுதான் போராட்டம் முடிவுக்கு வந்தது!

உலகின் முதல் ஸ்ட்ரைக்!

ஏர் ட்ராஃபிக் கன்ட்ரோலர்ஸ் ஸ்ட்ரைக் (அமெரிக்கா):

விமான நிலையத்தில் விமானங்கள் ஒழுங்காக வந்து தரை இறங்குவதற்கு உதவி செய்யும் ஊழியர்கள்... ஊதிய உயர்வு, பணி நியமனம் போன்ற பல கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் விமானப் போக்குவரத்து பெரிதாக பாதிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ரீகன் சகட்டுமேனிக்குப் பலரையும் வேலையைவிட்டுத் தூக்க, இறுதியில் உருப்படியாக எந்தக் கோரிக்கையும் நிறைவேறாமலேயே போராட்டத்தைக் கைவிட வேண்டியதாகிவிட்டது

உலகின் முதல் ஸ்ட்ரைக்!
உலகின் முதல் ஸ்ட்ரைக்!