Published:Updated:

உலகின் க்ளைமாக்ஸ்!

உலகின் க்ளைமாக்ஸ்!


க்ளைமாக்ஸ் விகடன்
உலகின் க்ளைமாக்ஸ்!
உலகின் க்ளைமாக்ஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உலகின் க்ளைமாக்ஸ்!
இரா.மன்னர்மன்னன்
உலகின் க்ளைமாக்ஸ்!
உலகின் க்ளைமாக்ஸ்!

'இந்த உலகத்தின் க்ளைமாக்ஸ் எப்போது?'

'சூரியன் தொடர்ந்து எரிந்துகொண்டே இருப்பதால், தற்போதைய அளவைவிட 40 சதவிகிதம் அதன் வெப்பம் அதிகரிக்கும். இதனால் நிலைப்புத்தன்மையை இழக்கும் சூரியனின் நடுவே கறுப்பு நிறத்தில் பெரிய துளை ஏற்பட்டு வெடித்துச் சிதறும். அதனால், பூமி அதீத வெப்பத்தில் கருகி, அழிந்து சிதறிவிடும். இதுதான் பூமிக்கும் சூரியனுக்குமான

க்ளைமாக்ஸ்' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால், இது அரங்கேற பல கோடி ஆண்டுகள் பிடிக்கும். அது வரை மனிதனுக்கு பொறுமை இருக்காதே?

உலக வெப்பமயமாதல் மனித இனத்தின் க்ளைமாக்ஸை மிக அருகில் கொண்டுவந்து இருக்கிறது. உலக வெப்பமயமாதல்பற்றி ஆய்வு செய்யும் சிலர், உலகின் மூத்த பழங்குடி இனங்களுள் ஒன்றான 'விவா' இனத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் பேட்டி எடுத்திருக்கிறார்கள்.

" 'இங்கு இருக்கும் உறைபனி முற்றிலும் மறைந்து போனால், அதுதான் மனிதனின் கடைசி காலமாக இருக்கும்' என்று என் மூதாதையர்கள் சொல்லி இருக்கிறார்கள். இப்போது இவை ஏன் மறைந்து கொண்டே வருகின்றது?" என்று அவர் கேட்டகேள்வி யில் மிரண்டுவிட்டார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உலகின் க்ளைமாக்ஸ்!

உலக வெப்பத்தை அதிகரித்து பனிப் பாறைகளை உருகவைத்து, அனைத்து உயிரினங்களையும் அழிவின் விளிம்புக்குக் கொண்டுவந்துவிட்டார்கள் மனிதர்கள். எக்கச்சக்க தொழிற்சாலை புகை, வாகனப் புகை, தேவைக்கு அதிகமான மின்சாரம் இவையெல்லாம் கூட்டணி அமைத்து, பூமியின் வெப்பத்தை டிகிரி டிகிரியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எவ்வளவு தெரியுமா? ஒவ்வொரு நாளும் இரண்டு அணுகுண்டு வெடிப்புக்குச் சமமான புகை... பூமியில் இருந்து வெளியேறுகிறது. இதனால் பூமியில் இருந்து எட்டு கி.மீ வரை உள்ள வாயு மண்டலப் பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் 0.5 டிகிரி செல்சியல் வெப்பம் உயர்ந்துள்ளது. இதனால், புவியின் வெப்பம் ஆர்டிக் பகுதியில் ஒரு டிகிரியும், அண்டார்டிக் பகுதியில் மூன்று டிகிரி அளவுக்கும் உயர்ந்துஉள்ளது. இந்த வெப்ப அதிகரிப்பால் துருவப் பனிப் பாறைகள் 13 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு உருகியுள்ளன. இதன் விளைவாகவே இயற்கை எழில் கொஞ்சிய பல இடங்கள் மனித இனம் வாழவே முடியாத கல்லறைகளாகிவிட்டன.

உலகின் க்ளைமாக்ஸ்!

நியூகினியாவில் பல தீவுகள் கடலுக்குள் போய்விட்டன. துவாலு நாடு பல கடற்கரைகளை இழந்து அழிவின் பிடியில் இருக்கிறது. இவ்வளவு ஏன்? இந்தியாவில் ஒரிஸா மாநிலம் வெப்பமயமாதலின் மறைமுக விளைவுகளினாலேயே இப்போது படாதபாடு படுகிறது. ஒரிஸாவின் கடந்த 100 வருட வரலாற்றில் 49 ஆண்டுகள் வெள்ளத்தாலும், 30 ஆண்டுகள் வறட்சியாலும், 11 ஆண்டுகள் புயலாலும் அது பாதிக்கப்பட்டு இருக்கிறது. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படாத ஆண்டுகள் வெறும் பத்தே பத்துதான். 'இதே நிலை விரைவில் இந்தியா முழுமைக்கும்... ஏன் உலகெங்கும் பரவும்' என்கிறார்கள்

உலகின் க்ளைமாக்ஸ்!

ஆராய்ச்சியாளர்கள். கிரீன்லாந்தில் உள்ள உலகின் மிகப் பெரிய பனி அடுக்குகளும், துருவப் பாறைகளும் உருகினால் முழு மனித இனமும் ஜல சமாதி ஆகிவிடும். இந்தப் பனி அடுக்குகள் பல வருடங்களுக்கு முன்பே உருக ஆரம்பித்துவிட்டன. 'சூரியனால்தான் பூமி அழியும்' என்பது அறிவியல் விதி. ஆனால், மனிதன்தான் வேக வேகமாக உலக உருண்டையை க்ளைமாக்ஸை நோக்கி உருட்டிக்கொண்டு இருக்கிறான்!

உலகின் க்ளைமாக்ஸ்!
உலகின் க்ளைமாக்ஸ்!