Published:Updated:

வீடியோ கேமுக்கு தடை: கோபித்து வெளியேறிய மகனை ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் தேடும் தாய்!

 வீடியோ  கேமுக்கு தடை: கோபித்து  வெளியேறிய  மகனை  ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் தேடும் தாய்!
வீடியோ கேமுக்கு தடை: கோபித்து வெளியேறிய மகனை ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் தேடும் தாய்!
 வீடியோ  கேமுக்கு தடை: கோபித்து  வெளியேறிய  மகனை  ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் தேடும் தாய்!

சென்னை: தினமும் பல மணி நேரம்   வீடியோ  கேம் விளையாடியதைக் கண்டித்ததால்  8 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய  மகனை,  'ஃபேஸ்புக், வாட்ஸ்அப்'  உதவியோடு தாய் ஒருவர் தேடிவருகிறார்.

தண்டையார்பேட்டை, திருவள்ளூவர் நகரைச்  சேர்ந்த தம்பதியர் துரைக்கண்ணு  - மணிமேகலை. இவர்களின் இளைய மகன் உதயகுமார்.  எலக்ட்ரிக்கல் துறையில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு வேலைக்குச்  செல்வதாகக்  கூறி, நண்பரின் வீட்டில் 'வீடியோ கேம்' விளையாடி வந்தார். இதனையறிந்த  மணிமேகலை உதயகுமாரைக் கண்டித்துள்ளார். அதே போல அவரின் சகோதரர் தனசேகரும், உதயகுமாரை கண்டித்தார். இதனால் மனமுடைந்த அவர்  கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மகன் மாயமானது குறித்து, புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மகன் மாயமான சோகத்தில் துரைகண்ணு, 2011 ஆம்  ஆண்டு இறந்து விட்டார். தற்போது உறவினர்கள் துணையுடன், ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் உதவியோடும் பெற்ற மகனை, தாய் மணிமேகலை தேடி வருகிறார்.

இது தொடர்பாக காணமல் போன உதயகுமாரின் தாய் மணிமேகலை கூறுகையில்,  "வேலைக்குச்  செல்ல வேண்டும் என கண்டித்ததால், உதயகுமார் கோபித்துக் கொண்டு சென்று விட்டான். அப்போது உதயகுமாருக்கு  23 வயது. காணாமல் போன மறுநாள், வீட்டருகேயுள்ள அடகு கடையில், கையில் அணிந்திருந்த மோதிரத்தை அடகு வைத்து, 600 ரூபாய் பணம் வாங்கியுள்ளான்.

இது கூட ஓராண்டு கழித்து, எங்களது முகவரிக்கு, அடகு கடை சார்பில் அனுப்பப்பட்ட  கடிதம்  மூலம் தெரிந்தது. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் அவனை பற்றிய தகவலைப்  பதிந்து தொடர்ந்து தேடி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.