Published:Updated:

சிலிண்டர் டெலிவரி: 'டிப்ஸ்' கொடுக்காமல் சாத்தியமா?

விகடன் விமர்சனக்குழு
சிலிண்டர் டெலிவரி: 'டிப்ஸ்' கொடுக்காமல் சாத்தியமா?
சிலிண்டர் டெலிவரி: 'டிப்ஸ்' கொடுக்காமல் சாத்தியமா?
சிலிண்டர் டெலிவரி: 'டிப்ஸ்' கொடுக்காமல் சாத்தியமா?

"கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும்போது தரை தளத்தில் உள்ள வீடுகளாக இருந்தால் ரூ.30ம், அடுக்குமாடி குடியிருப்புகளாக இருந்தால் ரூ.50ம் கட்டாயம் தர வேண்டும் என்று அந்த ஊழியர்கள் பிடிவாதமாக கேட்கிறார்கள். அப்படி அவர்கள் கேட்கும் பணத்தை தராவிட்டால் வாக்குவாதம் செய்துவிட்டு மீண்டும் சிலிண்டரை திரும்ப எடுத்து சென்று விடுகிறார்கள் அல்லது மறுமுறை வாக்குவாதம் செய்தவர்களுக்கு சிலிண்டர் உரிய தேதியில் விநியோகிக்கப்படுவதில்லை" என்று எக்கச்சக்க புகார்கள்.

இந்நிலையில் டெலிவரி பாய்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை என்றும், கட்டாயப்படுத்தினால் புகார் தெரிவிக்கலாம் என்றும்,  புகாரின் அடிப்படையில் அந்த கியாஸ் ஏஜென்சி மீதும், ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு 'டிப்ஸ்' இல்லாமல் டெலிவரி பாய்களிடமிருந்து கியாஸ் சிலிண்டர்களை வாங்குவது உங்களுக்கு சாத்தியமாகி உள்ளதா...அல்லது கசப்பான அனுபவம்தானா?

உங்களது அனுபவங்களை இங்கே முன்வைத்து விவாதிக்கலாம்.