Published:Updated:

இடைத்தேர்தல் தேவையா?

இடைத்தேர்தல் தேவையா?
இடைத்தேர்தல் தேவையா?
இடைத்தேர்தல் தேவையா?

டைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகமும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களும் வழக்கமாகிவிட்டது.

அந்த வகையில் தற்போது நடைபெற உள்ள ஶ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் இதே குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அதிமுகவினர் ஓட ஓட விரட்டி தாக்கியதாகவும், இதனை காவல்துறையினர் கண்டும் காணாதது போன்று நடந்துகொண்டதாகவும் அவ்விரு கட்சியினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் காவல்துறையினரின் உதவியுடன் வாக்காளர்களுக்கு ஓட்டு ஒன்றுக்கு ரூ. 2000 வீதம் பணம் பட்டுவாடா ஆகிவிட்டதாகவும், தடுக்க முற்பட்டவர்கள் தாக்கப்பட்டதாகவும் திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் கமிஷன் என்னதான் கறார் காட்டினாலும் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க முடியவில்லை.

இந்நிலையில் இடைத்தேர்தல் தேவையா அல்லது தேவை இல்லையா?

தேவை என்றால் ஏன் தேவை, தேவையில்லை எனில் மாற்று ஏற்பாடாக என்ன செய்யலாம் என்பது குறித்து  உங்களது கருத்தை முன்வைத்து விவாதிக்கலாம்.