Published:Updated:

அரசுத்துறை தேர்வுகளுக்கு பயிற்சியளிப்பதாகக் கூறி மோசடி!

Vikatan Correspondent
அரசுத்துறை தேர்வுகளுக்கு பயிற்சியளிப்பதாகக் கூறி மோசடி!
அரசுத்துறை தேர்வுகளுக்கு பயிற்சியளிப்பதாகக் கூறி மோசடி!

திருச்சி: திருச்சி அருகே அரசின் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்தவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

அரசுத்துறை தேர்வுகளுக்கு பயிற்சியளிப்பதாகக் கூறி மோசடி!

திருச்சி கண்டோமெண்ட் பகுதியில் இந்தியன் அகாடமி என்ற பெயரில் தனியார் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் திலீப். இங்கு மத்திய- மாநில அரசின் போட்டித்தேர்வுகள் மற்றும் காவல் பணிகளுக்கான உடல்திறன் பயிற்சிகள் நடத்தப்படுவதாக விளம்பரம் செய்து நடத்தப்பட்டு வந்தது. இதை நம்பி பலரும் கட்டணமாக ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தினர்.

அரசுத்துறை தேர்வுகளுக்கு பயிற்சியளிப்பதாகக் கூறி மோசடி!

ஆனால் போதிய காலத்திற்குள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாததோடு பயிற்சிக்கான போதிய ஆசிரியர்கள் அங்கு இல்லாததும் தெரியவந்தது. மேலும் காவல்பணிக்கான உடல் திறன் பயிற்சிக்கான போதிய மைதானம் மற்றும் உபகரணங்கள் எதுவும் இல்லாததும் தெரியவந்து கட்டணம் செலுத்தியவர்கள் கொதிப்படைந்தனர்.

இந்த நிலையில் இன்று அவர்கள் பயிற்சி நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால் அதற்கு   திலீப், உரிய பதில் அளிக்காததோடு எங்கு சென்று புகார் சொன்னாலும் என்னை யாரும் செய்ய முடியாது என பதில் சொன்னதாக தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது மாணவர்கள் தரப்பினருக்கும், அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதில் சில மாணவர்களை அவர் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து மாணவர்கள் கண்டோமெண்ட் பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

- தே. தீட்ஷித்