Published:Updated:

சுத்தி சுத்தி அசத்தும் மொபைல்கள்!

Vikatan Correspondent
சுத்தி சுத்தி அசத்தும் மொபைல்கள்!
சுத்தி சுத்தி அசத்தும் மொபைல்கள்!

வாசகர் பக்கம்

கையடக்கத் தொழில் நுட்பங்களை தன்னுள் அடக்கி வருடா வருடம் நடைபெறும் உலக அளவிலான மொபைல் மாநாடு இந்த வருடம்  பார்ஸிலோனாவில் மார்ச் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்திருக்கிறது. மொபைல் விரும்பிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மாநாடு இம்முறையும் தன் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும்படியாகவே விருந்து வைத்திருந்தது.

சுத்தி சுத்தி அசத்தும் மொபைல்கள்!

பலதரப்பட்ட நிறுவன‌ங்கள் மொபைல் சந்தையில் தங்களின் ஆதிக்கங்களை சாதித்துக்கொள்ள என்னனென்ன அறிமுகங்களைச் செய்திருக்கின்றது என்று பார்க்கலாம்.

சுத்தி சுத்தி அசத்தும் மொபைல்கள்!

சாம்சங் இன் கேலக்ஸி எஸ்6

QHD 577ppi துல்லியத்திரை, வெளியே எடுத்துச்செல்கிற போதும் கூட‌ பிரகாசமான திரைத்தோற்றம், உலோகம் + கொரில்லா க்ளாஸ் 4 சேர்ந்த வெளிப்புற உறை என சிறப்புகளை சேர்த்தும், பேட்டரியை அகற்ற முடியாத வடிவமைப்பு, மெமரி காட் சொருகும் வசதி இன்மை என்ற மொக்கையான சேதியும் சேர்ந்தே சொதப்பி விட்டிருக்கிறது.

இத்தோடு சேர்த்தே வெளியான எஸ்6 எட்ஜ் ஆனது இரு விளிம்பிலும் வளைந்த மேற்பரப்பு வடிவம் கொண்டு அமைந்திருந்ததை சொல்லும்படியாக ரசிக்கப்பட்ட பலதுகளில் இதுவும் ஒன்று.

சுத்தி சுத்தி அசத்தும் மொபைல்கள்!

சாம்சங் கியர் வீ.ஆர் (Samsung Gear VR)

திரையில் உண்மையை தோற்றுவிக்கும் படியான இந்த Samsung Gear VR ஆனது 360 பாகையில் வீடியோ, கேம்ஸ், படங்கள் என சுத்தி சுத்தி விளையாடலாம். ஃப்ரொன்ட், ரிவர்ஸ், சைட் என எந்த திசையிலும் நம் பார்வையை திருப்புகிறது இந்த புது கியர்.

அத்தோடு சாம்சங் ஆனது ஸ்மார்ட் வொச் தயாரிப்பில் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையானது, ஏதோ ஒன்ன பெரிசா செஞ்சிட்டு இருக்குதுன்னு மட்டும் புரிய வைக்கிறது.

சென்ற வருடம் ஆப்பிளின் மொபைல் மூலமான கொடுக்கல் வாங்கல்கள் அடிப்படையிலான‌ தொழில்நுட்பத்தை ஒரு படி மிஞ்சி, சாம்சங்கும் தன் பங்குக்கு இம்முறை அந்த தொழில்னுட்பத்தில் வேகத்தை கூட்டியிருக்கிறது.

சுத்தி சுத்தி அசத்தும் மொபைல்கள்!

எச்.டி.சி வன் எம்9 (HTC One M9)

அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தன் பங்குக்கு இந்த வருடமும் வாடிக்கை காட்டியிருக்கிறது HTC One M9. Qualcomm's Snapdragon 810 ப்ராஸஸர், 3ஜீபி ரெம், முன்னைய வெளியீட்டை விடவும் அதிகப்படியான பேட்டரி கொள்திறன் (2800 mAh) என மற்ற நிறுவனங்களை கொஞ்சமாய் மிரட்டி இருந்தாலும் 20 எம்பி கேமராவைத் தந்தும் புகைப்பட‌ங்களின் வண்ணத்தெளிவில் கோட்டை விட்டிருக்கிறது HTC One M9.

HTC Grip என்கிற கையிலணியும் டிஜிட்டல் பட்டையும், HTC Vive என்று சாம்சங் Gear VR-ஐயும் வருங்காலத்தில் நாமம் போடலாம் என்ற‌ அளவுக்கும் HTC இன் இந்த ஆண்டிற்கான தொழில்நுட்ப களத்தை சிறப்பாகவே செப்பனிட்டிருக்கிறது.

சுத்தி சுத்தி அசத்தும் மொபைல்கள்!

மைக்ரோசாஃப்ட்

விண்டோஸ் இயங்குதளம் கொண்ட Microsoft Lumia 640 ஃபோன் விரும்பிகளுக்கு நிச்சயம் இந்த மொபைல் வாடிக்கை காட்டும். 4ஜீ தொழில்நுட்பம், இரட்டை சிம் வசதி, கவரும் விதத்திலமைந்த திரைத்துல்லியம் என்று வசதிகளைக்கொண்ட இந்த ஃபோன் கொள்ளை லாபம் வைக்காமல் வாடிக்கையாளர்களை அள்ளும் எண்ணம் கொண்டு விலையில் கவனம் செலுத்தி இருப்பதும் சொல்லும்படியான ஒன்றே!

சுத்தி சுத்தி அசத்தும் மொபைல்கள்!

Microsoft Lumia 640 XL

பெரிய அளவு திரைகொண்ட ஃபோன்களின் பட்டியலில் 5.7 என்ற திரையினைக்கொண்ட இந்த ஃபோனும் இடம் பிடித்துக்கொண்டது. 3000mAh பேட்டரித்திறன் மற்றும் 1080p திரைத்துல்லியம் போன்ற வசதி கொண்ட இந்த ஃபோன் ஃபேப்லட் வடிவு ஃபோன் வாடிக்கையாளர்களை குறி வைத்து தயாரிக்கப்பட்ட கட்டுபடியான விலையில் கிடைக்கும் ஃபோன் தான்.

இப்படி இருக்கையில் விண்டோஸ் 10 ஓ.எஸ். பற்றிய அறிவிப்பையும் லைட்டா வெளியிட்டு இருக்கிறது.

ஃபோன்களின் ட்ச்  கீ போர்ட்டுகளுக்கு மாற்றாக பயன்படுத்தும் மடிக்கக்கூடிய கீபோர்டை, சீடி கேஸ் போன்ற அளவில் வடிவிட்டு Microsoft Universal Foldable keyboard பெயரிட்டு வெளியிட்டு இருக்கிறது.

சுத்தி சுத்தி அசத்தும் மொபைல்கள்!

சோனி

10.1 இன்ச் டேப்லட் ஆக வெளிவந்திருக்கும் Sony's Xperia Z4 ஆப்பிளின் ஐ பேடுக்கு நிகரான தொழில்னுட்பத்தை சற்றே சாடி இருக்கிறது. தண்ணிக்குள்ளேயே வைத்திருந்து சோனி பி.எஸ்4 மூலம் இந்த Sony's Xperia Z4 இல் கேம் விளையாட முடியும்.

Sony Xperia M4 என்ற சோனியின் வரிசையில் வந்திருக்கிற ஃபோன்களில் நிச்சயம் இந்த ஃபோனும் அசத்தும். 13 எம்பி கேமரா, 5 இன்ச் திரை வடிவான இந்த ஃபோனின் விலையும் ஒப்பீட்டளவில் சற்று லாபகரமானதே.

எம். மத்தீன் (இலங்கை)