Published:Updated:

மிட்டாய் என நினைத்து மாத்திரையை தின்ற சிறுமி பரிதாப சாவு!

Vikatan Correspondent
மிட்டாய் என நினைத்து மாத்திரையை தின்ற சிறுமி பரிதாப சாவு!
மிட்டாய் என நினைத்து மாத்திரையை தின்ற சிறுமி பரிதாப சாவு!
மிட்டாய் என நினைத்து மாத்திரையை தின்ற சிறுமி பரிதாப சாவு!

சென்னை: மிட்டாய் என நினைத்து ஊட்டச்சத்து மாத்திரைகளை தின்று 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம்  உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். தனியார் நிறுவனத் தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பாளையம். இவர் களது 4 வயது மகள் நிபிகா.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிபிகா வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தாள். அப்போது அங்கு இருந்த ஊட்டச்சத்து மாத்திரைகளை, மிட்டாய் என நினைத்து தின்று விட்டாள். சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கடைந்ததாக தெரிகிறது. அதிர்ச்சி அடைந்த சந்தோஷ், உடனடியாக அவளை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று நிபிகா பரிதாபமாக உயிரிழந்தாள்.