Published:Updated:

கறுப்பு நிற பெண்களிடம் நிற பேதம் காட்டப்படுகிறதா?

Vikatan Correspondent
கறுப்பு நிற பெண்களிடம் நிற பேதம் காட்டப்படுகிறதா?
கறுப்பு நிற பெண்களிடம் நிற பேதம் காட்டப்படுகிறதா?
கறுப்பு நிற பெண்களிடம் நிற பேதம் காட்டப்படுகிறதா?

க்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், தென்னிந்தியப் பெண்களின் தோலின் நிறம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், "இங்கு சிலர் தோலின் நிறத்தால் மயங்கியவர்களாக உள்ளனர். நம் நாட்டில் கறுப்பு நிறமுடைய ஆண்கள் பலர் உள்ளனர். 

ஆனால், மணமகள் தேடும் இணையதளத்தில் வெள்ளை நிறப் பெண்களைத்தான் அதிகம் விரும்புகின்றனர். தென்னிந்தியப் பெண்கள் கருப்பானவர்களே. ஆனால், அழகான உடல் அமைப்பைக் கொண்டவர்கள். அவர்களுக்கு நடனமாடவும் தெரியும். ஆனால், சிலர் வெள்ளைத் தோலின் நிறத்தால் மயங்கியவர்களாக உள்ளனர்.

நிர்பயா ஆவணப்படம் எடுத்த, லெஸ்லி உட்வின்கூட வெள்ளைத்

கறுப்பு நிற பெண்களிடம் நிற பேதம் காட்டப்படுகிறதா?

தோல் நிறத்தைக் கொண்டவராக இருந்ததால்தான் அவருக்கு சிறையில் ஆவணப்படம் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு அழகான பெண்களுக்குத்தான் அனைத்து வாய்ப்புகளும் கொடுக்கப்படுகின்றன. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கறுப்பு நிற தோல் கொண்ட  பலர் நிற பேதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் " என பேசி உள்ளார்.

அவரது இந்த பேச்சு சர்ச்சையும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ள போதிலும், தனது கருத்தில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  சரத் யாதவின் இந்த பேச்சு ஏற்புடையதுதானா...அவர் கூறியபடி  கறுப்பு நிற பெண்கள் நிற பேதத்தால் பாதிக்கப்படுகிறார்களா?

இதுகுறித்த உங்களது கருத்தை முன்வைத்து  விவாதிக்கலாம்.