Published:Updated:

இறந்த குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்ததா? திருப்பூர் பரபரப்பு

Vikatan Correspondent
இறந்த குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்ததா? திருப்பூர் பரபரப்பு
இறந்த குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்ததா? திருப்பூர் பரபரப்பு
இறந்த குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்ததா? திருப்பூர் பரபரப்பு

திருப்பூர்: திருப்பூரில் இறந்த குழந்தையை புதைக்க முயன்றபோது குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (40). கிறிஸ்தவமத போதகர். இவரது மனைவி தேவி (36). திருமணமாகி சில வருடங்களான நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் தேவி கருத்தரித்தார். கடந்த 12ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, தேவி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 14ம் தேதி காலை அவருக்கு குழந்தை பிறந்தது.

குறைப் பிரசவத்தில் பிறந்ததால், குழந்தை மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்டதாக தெரிகிறது. சில மணி நேரங்களில் குழந்தை இறந்து விட்டதாக கூறி, குழந்தையை மருத்துவ மனை நிர்வாகம் உறவினர்களிடம் ஒப்படைத்தது. இதையடுத்து குழந்தையின் உடலை அடக்கம் செய்ய மயானத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டது. அப்போது இறந்ததாக கூறப்பட்ட குழந்தையை அதன் உறவினரான பியூலா என்பவர் கையில் வைத்திருந்தார்.

அப்போது, திடீரென குழந்தையின் வாய் மற்றும் வயிறு பகுதி அசைந்ததாகவும், இதயத்துடிப்பும் இருந்த தாகவும் தெரிவித்த பியூலா, குழந்தை உயிரோடு இருப்பதாகக் கூறி கத்த, உறவினர்கள் அதிர்ச்சியடைந் தனர்.

இதையடுத்து குழந்தையை எடுத்துக்கொண்டு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், சில மணி நேரத்துக்கு பிறகு இறந்து விட்டதாக அறிவித் தனர். இதனால் குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அரசு மருத்துவர்களின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் என்று கூறி குழந்தையின் உறவினர்கள்  டாக்டர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இறந்த குழந்தைக்கு மீண்டும் உயிர் வந்ததா? திருப்பூர் பரபரப்பு

இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் கூறுகையில், "மருத்துவமனையில் குழந்தைக்கு முறையான சிகிச்சை கொடுக்கவில்லை. குழந்தை பிறந்த உடன் இறந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் குழந் தையின் உடலை எங்களிடம் காண்பிக்கவில்லை. மாலை 3 மணியளவில் தான் உடலை எங்களிடம் ஒப்படைத்தார்கள். குழந்தை குறித்து எந்த தகவல் கேட்டாலும் அவர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை. உடனடியாக குழந்தையை எங்களிடம் தந்திருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம்," என அவர்கள் புகார் தெரிவித்தனர்.

உயிரோடு இருந்த குழந்தையை இறந்ததாக கூறியதும், புதைக்க சென்ற போது குழந்தை உயிரோடு இருப்பது தெரியவந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந் நிலையில், இந்த புகாரை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. "தேவிக்கு குறைபிரசவத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது. அதிலும், பிறந்த குழந்தையின் எடை வெறும் 500 கிராம்தான். குழந்தை இறந்து தான் பிறந்தது. அடக்கம் செய்ய சென்றுவிட்டு மீண்டும் குழந்தையை எடுத்து வந்ததையொட்டி, மருத்துவ மனையில் அனுமதித்தோம். மற்றபடி ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டது," என்றனர்.

- ச.ஜெ.ரவி