Published:Updated:

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!
தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: தமிழகத்தில் பணியாற்றி வரும் பல்வேறு ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ''தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளராக இருந்த துரை, சிவகங்கை கண்காணிப்பாளராகவும், சிவகங்கை காவல் கண்காணிப்பாளராக இருந்த அஷ்வின் கோட்னிஸ் தூத்துக்குடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை காவல் கண்காணிப்பாளராக இருந்த நரேந்திரன் நாயர் விழுப்புரம் மாவட்டத்திற்கும், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த விக்கிரமன் நெல்லைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

போதை மருந்து கடத்தல் தடுப்பு பலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் சாந்தி, மத்திய புலனாய்வு பிரிவின் கண்காணிப்பாளராகவும், மத்திய புலனாய்வு பிரிவு கணிகாணிப்பாளர் தேவராணி போதை மருந்து கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை சரக காவல் ஆணையராக இருந்த சுமித்சரண், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாகவும், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த முருகன் நெல்லை சரக டி.ஐ.ஜி.யாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்'' எனக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு