Published:Updated:

குற்றவாளிகளை தியாகிகளாக சித்தரித்த அரசு காலண்டரால் சர்ச்சை!

Vikatan Correspondent
குற்றவாளிகளை தியாகிகளாக சித்தரித்த அரசு காலண்டரால் சர்ச்சை!
குற்றவாளிகளை தியாகிகளாக சித்தரித்த அரசு காலண்டரால் சர்ச்சை!
குற்றவாளிகளை தியாகிகளாக சித்தரித்த அரசு காலண்டரால் சர்ச்சை!

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொலை செய்த குற்றவாளிகளை தியாகிகளாக சித்தரிக்கும் அரசு காலண்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தியாகிகள் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் குழுவால் அரசு காலண்டர் வெளியிடப்பட்டது. பஞ்சாபில் வெளியான இந்த காலண்டரில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கொலை செய்த குற்றவாளிகளின் படத்தை பிரசுரித்து, அவர்கள் தியாகிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், முன்னாள் ராணுவ தளபதி வைத்யாவைக் கொலை செய்தவர்களையும் தியாகிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், விளக்கம் அளிக்குமாறும் பா.ஜ.க.விடம் கோரியுள்ளது.