Published:Updated:

தமிழக பட்ஜெட் 25ஆம் தேதி தாக்கல்!

Vikatan Correspondent
தமிழக பட்ஜெட் 25ஆம் தேதி தாக்கல்!
தமிழக பட்ஜெட் 25ஆம் தேதி தாக்கல்!
தமிழக பட்ஜெட் 25ஆம் தேதி தாக்கல்!

சென்னை: 25ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தமிழக சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், ''தமிழக சட்டமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் 25ஆம் தேதி புதன்கிழமை கூடுகிறது. அன்றைய தினம் காலை 10.00 மணியளவில் 2015-16ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

அதேபோல், 2015-2016ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் 28ஆம் தேதி சனிக்கிழமை தாக்கல் செய்யப்படும். மேலும், அதே நாளில் 2014-15ஆம் ஆண்டிற்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்படும்'' எனக் கூறியுள்ளார்.