Published:Updated:

வாக்மேனுக்கு வயது '40'... இசையைக் கைக்குள் கொண்டு வந்த சோனியின் 'இசை அரசன்'

கையடக்க மியூசிக் பிளேயர்களுக்கு முன்னோடியாக இருந்தது வாக்மேன்தான்.

வாக்மேன்
வாக்மேன்

வாக்மேன் என்ற பெயரைக் கேட்டதுமே 80'S, 90'S கிட்ஸ்களுக்கு அவர்களின் கடந்த கால நினைவுகள் மனதுக்குள் சிறகடிக்கும். 1979-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சோனி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கையடக்க மியூசிக் பிளேயரான வாக்மேன் நாற்பது வருடங்களைக் கடந்திருக்கிறது.

வாக்மேன்
வாக்மேன்

ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட TPS-L2 மாடல்தான் முதல் வாக்மேன் பிளேயர். அதன் பின்னர் வெளியான பல கையடக்க எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு இதுதான் முன்னோடி. ரேடியோக்கள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில் வெளியான வாக்மேன் விரைவாகவே சந்தையில் பெரிய இடத்தைக் கைப்பற்றியது. எங்கே வேண்டுமானாலும் கையில் எடுத்துச் செல்ல முடியும் என்பது அதை உலகம் முழுவதிலும் பிரபலமாக்கியது.

விற்பனையில் சக்கைப்போடு போட்ட வாக்மேன் ஒரு கட்டத்தில் இளைஞர்களின் கையில் இருக்கும் பெரிய அடையாளமாகவே மாறியது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகான காலகட்டத்தில் டிஜிட்டல் கருவிகளின் வருகை தொடங்கியதால் வாக்மேனின் புகழ் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கியது. செல்போன்கள், ஐபாட்கள், MP3 பிளேயர்கள் என பாடல்கள் கேட்பதற்குப் பல சாதனங்கள் வந்த பிறகும் அதன் தயாரிப்பு நிறுத்தப்படவில்லை.

வாக்மேன்
வாக்மேன்

ஒரு கட்டத்தில் இதற்குமேல் தாக்குப்பிடிக்காது என்ற நிலை வந்ததால் 2010-ம் ஆண்டில் கேஸட் போடும் வகையில் இருந்த வாக்மேன் தயாரிப்பை நிறுத்தியது சோனி. அதுவரை சுமார் 400 மில்லியன் வாக்மேன்கள் விற்பனையாகியிருக்கின்றன.

அதுவரை சுமார் 400 மில்லியன் வாக்மேன்கள் விற்பனையாகியிருக்கின்றன. 2010-ம் ஆண்டோடு அதன் 30 ஆண்டுகால சகாப்தமும் முடிவுக்கு வந்தது. ஆனால் இன்று வரை வாக்மேன் என்ற பெயரில் MP3 பிளேயர்கௐளை சோனி விற்பனை செய்து வருகிறது.

உங்களுக்கும் வாக்மேனுடன் மறக்க முடியாத நினைவுகள் இருந்தால் அதை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.