Published:Updated:

இதைப் படிக்காதீங்க!

இதைப் படிக்காதீங்க!

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
இதைப் படிக்காதீங்க!
இதைப் படிக்காதீங்க!
இதைப் படிக்காதீங்க!
 
இதைப் படிக்காதீங்க!

திடீர் திடீரென்று ஸ்டேஷனில் இருந்து போன் வருகிறது. 'மதி இழந்து போய் நித்தமும் தகராறு செய்கிறானே' என்று நொந்து போய் அழுகிறார் அதிகாரத்தில் இருக்கும் அப்பா!

இடைத் தேர்தலில் மகனுக்காகத் தொகுதியை விட்டுத் தாருங்கள் என்று தலைவரிடம் கேட்கத்தான் வந்தாராம் ஹோம். அங்கு சரியான ரியாக்ஷன் கிடைக்காததில் வருத்தமாம்!

அண்ணன்-தம்பி மோதல் அணையாமல் அப்படியேதான் இருக்கிறதாம். தென்னகம் வந்த தம்பியைப் பார்க்கப் பலருக்கும் அண்ணன் விதித்த தடையால் அது மீண்டும் வெளிப்பட்டுவிட்ட தாம்!

தாய்க் கழகத்துக்கான தூண்டிலை மலர்ச்சிக்காரர் ஒருவர் வைத்துக்கொண்டு அலைவதாக தலைமைக்குச் சந்தேகம். எனவே, அவருக்குத் தெரிவது மாதிரி எந்த ஆலோசனைகளையும் நடத்து வது இல்லையாம்!

காவிக் கட்சித் தலைவர் பற்றி டெல்லிக்கு நிறையப் புகார் கள். மதுரைக்குப் பக்கமாக இருக்கும் புள்ளிவிவரப் புலி ஒருத்தர் கையில் அடுத்ததாகத் தலைமை பதவி போகலாமாம்!

கணிசமான வாக்குகள் வாங்கிய சாதி அமைப்பைச் சேர்த் துக்கொண்டால்தான் இடைத் தேர்தலில் ஜெயிக்க முடியும் என்று உளவு சொல்லப்பட்டு உள்ளதாம். அநேகமாக கள் குறித்த கொள்கை முடிவு விரைவில் வரலாம்!

சில புதிய ஆட்களுக்குப் பதவிகளைப் பகிர்ந்து கொடுத்து கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சப் போகிறாராம் அம்மா. அதற்கான அறிவிப்புகள் இன்னும் சில வாரங்களில் வரப் போகின்றன!

 
இதைப் படிக்காதீங்க!
-
இதைப் படிக்காதீங்க!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு