பிரீமியம் ஸ்டோரி

24-06-09
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
 
5 கேள்விகள்
5 கேள்விகள்

காந்தி கண்ணதாசனிடம்...

"கலைஞர் பிறந்த நாளை உலகப் புத்தக தினமாக, பதிப்பாளர் சங்கம் சார்பில் நடத்திவந்த நீங்கள், இந்த ஆண்டு ஏன் நடத்தவில்லை?"

"சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டு இருந்தோம். ஆனால், எங்களின் நிதி நிலை கொஞ்சம் சரியில்லாததால் கொண்டாட முடியவில்லை. அடுத்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம்!"

கம்பம் செல்வேந்திரனிடம்...

"மாநில சுயாட்சி என்று முதல்வர் வலியுறுத்துவது சந்தேகமாக இருக்கிறது. கூடுதல் அதிகாரம் வேண்டும் என்பது வேறு, சுயாட்சி என்பது வேறு, இது தேச நலனுக்கு எதிரானது என்று இல.கணேசன் கூறியுள்ளாரே?"

"மத்திய அரசு மனிதனின் உடலைப் போன்றது. மாநிலங்கள் அதன் உறுப்புகளைப் போன்றவை. உறுப்புகள் வலிமையோடு இருந்தால் தேகம் பலவீனமாகிவிடும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்!"

செல்வப்பெருந்தகையிடம்...

"எம்.எல்.ஏ. பதவியை நீங்கள் ராஜினாமா செய்ததை சபாநாயகர் இதுவரை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?"

"முதலில் நான் ராஜினாமா கடிதம் கொடுத்தது உண்மைதான். பிறகு என் தொகுதி மக்கள், நான் ராஜினாமா செய்யக் கூடாது என்று என்னையும் பிறகு சபாநாயகரையும் சந்தித்து வலியுறுத்தினார்கள். மக்களின் விருப்பத்துக்காகவே எம்.எல்.ஏ. பதவியில் தொடர்கிறேன்!"

5 கேள்விகள்

கவிஞர் நா.முத்துக்குமாரிடம்...

"நீங்கள் தற்கொலை செய்துகொண்டதாக வதந்தி கிளப்பியது யார்?"

"என் மரணத்தில் சந்தோஷப்பட ஒரு நண்பர் இருக்கிறார் என்று அன்றுதான் அறிந்தேன். அந்த முகம் தெரியாத நண்பருக்கு நன்றி. அவரால்தான் என் மீது அன்பும் அக்கறையும்கொண்ட பலர் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டேன்!"

லட்சுமிராயிடம்...

"இனி என்னைப்பற்றிப் பேச வேண்டாம் என டோனி உங்களிடம் சொன்னாராமே?"

"குட் ஜோக். விரும்பாதவர்கள் செய்கிற வேலை இது. எங்களின் ஃப்ரெண்ட்ஷிப் எப்போதும் தொடர்கிறது!"

 

 
5 கேள்விகள்
-
5 கேள்விகள்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு