Published:Updated:

எக்ஸ்பிரஸ் குக்கிங்!

எக்ஸ்பிரஸ் குக்கிங்!

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
 
ராம்கி படம்: கே.கார்த்திகேயன்
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!

மிக எளிதான மீன் செய்முறைகளை இந்த வாரம் பார்க்கலாம்.

7 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள இந்திய கடலோரப் பகுதி முழுவதும் கடல் மீன் விரும்பி உண்ணப்படுகிறது. மகாராஷ்டிரா, கோவா, கேரளா, தமிழ்நாட்டில் மீன் கறிகள் மிகப் பிரபலம். கடல்சாரா இடங்களில் ஏரி, ஆற்று மீன்கள் விரும்பப்படுகின்றன.

மீனை அப்படியே கொதிக்கும் கிரேவியில் சேர்த்து வேகவிடலாம் அல்லது சுட்டோ, வறுத்தோ, பொரித்தோ சேர்க்கலாம். (முதல் வரிசையைப் பார்க்கவும்)

எக்ஸ்பிரஸ் குக்கிங்!

கிரேவி ஊருக்கு ஊர் மாறும். புளித் தண்ணீர் (தமிழகம், ஆந்திரா) மீன்புளி, தேங்காய்ப்பால் (கேரளம், மகாராஷ்டிரம், கோவா), வினிகர் (கோவா), தயிர் (காஷ்மீர்), கடுகு விழுது (வங்காளம்) ஆகியவை சேர்த்து கிரேவி தயாரிக்கலாம். (இரண்டாம் வரிசையைப் பார்க்கவும்).

இந்த கிரேவிகளுக்கு வாசனையூட்ட பல்வேறு ரெடிமேட் மீன் மசாலாக்கள் கிடைக்கின்றன. அல்லது தாளித்தோ, அரைத்தோ தங்கள் விருப்பப்படி மசாலா தயாரிக்கலாம். (மூன்றாம் வரிசையைப் பார்க்கவும்).

இவற்றை வறுக்கும் எண்ணெய் ஊருக்கு ஊர் மாறும். தமிழ்நாட்டில் நல்லெண்ணெய், கேரளாவில் தேங்காய் எண்ணெய், ஆந்திரா, மகாராஷ்டிராவில் கடலை எண்ணெய், காஷ்மீரில் நெய்யும், வங்காளம், பீகார், ஒரிசாவில் கடுகு எண்ணெய் உபயோகப்படுத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் மீன் பச்சையாகவோ, ஓவனில் சுட்டோ, ஆவியில் வேகவைத்தோ உண்ணப்படுகிறது. நம்மைப் போல் அதிக மசாலா சேர்க்கப்படுவது கிடையாது.

இந்த கிரேவிக்களில் மீன் மட்டுமல்லாமல், இறால், நண்டு போன்ற பல கடல் உணவுகளையும் சேர்த்து சமைத்து அசத்துங்க!

டிப்ஸ்:

5-10 நிமிடங்களுக்குள் மீன் வெந்துவிடும். அதற்கு மேல் வைத்தால் குழைந்துவிடும். மண் சட்டியில் சமைப்பது அதிக சுவை கொடுக்கும். முதல் நாளைவிட மறுநாளே மீன் உணவுகள் அதிக சுவையாக இருக்கும்.

மீன் வகைகள் செய்முறை: முதல் வரிசையில் இருந்து ஒரு மீன் வகையும், இரண்டாம் வரிசையில் இருந்து ஒரு கிரேவியையும், மூன்றாம் வரிசையிலிருந்து ஒரு வாசனையூட்டலையும் கலந்து மிதமான தீயில் 5-10 நிமிடங்கள் சமைக்கவும். ருசிக்கேற்ப உப்பு, மிளகாய்த் தூள், மீன் மசாலா சேர்க்கவும்.

எக்ஸ்பிரஸ் குக்கிங்!

மாதிரி குறிப்பு: செட்டிநாடு மீன் குழம்பு 2-4-2, கருவாட்டுக் குழம்பு 3-1-4, கொங்கன் மீன் குழம்பு 4-5-2, கேரளா மீன் மொய்லி 1-3-4, கேரளா வறுத்து அரைத்த மீன் கூட்டான் 1-5-4.

 
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
-சமையல் மணக்கும்...
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு