பிரீமியம் ஸ்டோரி

24-06-09
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
 
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

பளபளா மினுமினு காஸ்டியூம்களில் அட்டகாசமாக போஸ் கொடுத்து இருப்பது அண்ணன் அபிஷேக் பச்சனும் அவரது தங்கை ஸ்வேதா நந்தாவும். ஒரு ஃபேஷன் நிறுவனத்தின் விளம்பரத்துக்காகத்தான் இந்த காஸ்ட்லி அண்ணன்- தங்கச்சி ஐடியா. ஃபேஷன் மலர்கள்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

மயிலாடுதுறையில் சறுக்கிய மணிசங்கர் ஐயருக்கு அடி மேல் அடி! அவரது ஹாட்மெயில் அக்கவுன்ட்டை ஹேக் செய்த பேர்வழி, 'லண்டனில் ஹோட்டல் பில்லுக்குக் காசு இல்லாமல் மாட்டிக்கொண்டுவிட்டேன். அவசரமாகப் பணம் அனுப்பவும்!' என்று ஐயரின் நெருங்கிய நண்பர்களுக்கு அவர் பெயரிலேயே மெயில் அடித்திருக்கிறான். எத்தனை பேர் ஏமாந்தாங்களோ!

அஜீத்தின் 50-வது படத்தின் இயக்குநர் அநேகமாக சீமான். தயாரிப்பு கலைப்புலி தாணுவாக இருக்கலாம். அப்போ புலிப் பாய்ச்சல்தான்!

இன்பாக்ஸ்

'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' துவக்கப்பட்ட அதே ஆகஸ்ட் 31-ம் தேதியில் இருந்து 'மீடியா வாய்ஸ்' என்ற ஆங்கிலப் பத்திரிகையை ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது சரத்குமாரிடம். 'எடிட்டர் சரத்குமார்' என்று பதிவுசெய்து இருக்கிறார்கள். பழசை இன்னும் மறக்கலீங்களா?

இன்பாக்ஸ்

திருமாவளவன் செம சின்ஸியராக இரண்டு வாத்தியார்களிடம் இந்தி படித்து வருகிறார். என்னதான் ஆங்கிலம் தெரியும் என்றாலும், வடக்கே இந்தியில் வாள் சுழற்றினால்தான் கவனம் கிடைக்கும் என்பதால் இந்த ஸ்பெஷல் கிளாஸ். பஹூத் அச்சா!

அக்ஷய்குமார், கரீனா கபூர் நடிக்கும் இந்திப் படம் 'கம்பக்த் இஷ்க்.' அதில் ஹாலிவுட் படங்களின் ஸ்டன்ட் மாஸ்டராக வரும் அக்ஷய், ஒரு காட்சியில் சில்வஸ்டர் ஸ்டாலோனுக்கு சண்டை சொல்லிக் கொடுப்பாராம். தமிழில் வந்த 'பம்மல் கே.சம்பந்தம்' இந்தி பேசும் கதையாம். பம்பாய் கே.சம்பந்தம்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

'ஸ்லம்டாக்' குழந்தை நட்சத்திரம் ரூபினா, அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கைகளில் வீட்டை இழக்க, பாப்பாவுக்கு இன்னும் எகிறிவிட்டது மைலேஜ். சேரி முதல் ஆஸ்கர் மேடை வரையிலான ரூபினாவின் வாழ்க்கை(!) வரலாறு, 'ஒரு சிறுமியின் கனவு: நட்சத்திரங்களுக்குள் என் பயணம்' என்ற தலைப்பில் சுயசரிதையாகத் தயாராகிறது. பாப்பா சரிதை!

இந்தியாவின் 'செக்ஸியான பெண்' பட்டத்தைக் கடந்த ஆண்டு வென்றார் காத்ரினா கைஃப். கரீனா, தீபிகா, பிரியங்கா, பிபாஷா என அதிரடி அழகிகளின் சவால் போட்டிக்கு மத்தியில், இந்த ஆண்டும் அப்பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார் காத்ரினா. 'ஹாட்'ரிக் அடிப்பீங்களா?

இன்பாக்ஸ்

'தேவ் பட்டேல் லவ்வர் பாய்தான். அவனைக் காதலித்தால் என்ன தப்பு?' என்று ஒருவழியாக தங்களுக்கு இடையே ஆன காதல் பற்றி 'ஓப்பன் ஸ்டேட்மென்ட்' விட்டிருக்கிறார் ஃப்ரீதா பின்டோ. லவ்வர் பாய்க்கு உங்களைவிட 5 வயசு கம்மியாச்சேம்மா... பரவால்லியா?

'கட்டா மீட்டா' என்ற இந்திப் படத்தில் அக்ஷய்குமாருடன் டூயட் பாட இருப்பது கோலிவுட் குருவி த்ரிஷா. அவரை தமிழில் அறிமுகம் செய்த ப்ரியதர்ஷன்தான் இந்திக்கும் அழைத்துச் செல்கிறார். இப்படியே எல்லாரும் அங்கே போயிட்டா, இங்கே யாருங்க கலைச் சேவை செய்யிறது?

இன்பாக்ஸ்

தனது கொடநாடு ஓய்வின்போதும் ஆட்சியாளர்களுக்குக் குடைச்சல் ஓயக்கூடாது என்பது அம்மாவின் ஆணை. பிள்ளையார் சுழியாக, நெய்வேலி நெருப்புக்கு நெய் வார்க்க உத்தரவாம். தனி ஈழத்துக்கு தண்ணி தெளிச்சுட்டீங்களா மேடம்?!

இன்பாக்ஸ்

ஈழம் சம்பந்தமான ஒரு படத்துக்குத் திரைக்கதை அமைக்கும் வேலைகளில் இயக்குநர் அமீர் இப்போ பிஸி! படத்தின் தலைப்பு... 'கிளிநொச்சி'. இப்பவே கிடுகிடுக்குதே!

'வீட்டுக்கு ஓர் இளைஞன்!' - இதுதான் ப.சிதம்பரத்தின் லேட்டஸ்ட் ஸ்லோகன். 2011 தேர்தலுக்குள் வீட்டுக்கு ஓர் இளைஞனை காங்கிரஸில் சேர்க்க வேண்டும் என்பது அவர் அதிரடி அஜெண்டா. ஐடியா உபயம் ராகுல் காந்தியா?

'ரெட்டைச் சுழி'யில் சீனியர் சுழியான கே.பாலசந்தருக்கு மட்டுமே ஜோடி உண்டு. ஜோடிக்கான லேடியாக ஜெயசித்ராவை கே.பி-யே டிக் அடித்தாராம். டூயட் உண்டுங்களா?

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 'கௌரவ டாக்டர் பட்டம்' வழங்கியபோது, 'இறைவன் அனுமதித்தால், நான் இங்கு கௌரவ லெக்சரராக வகுப்பு எடுக்கலாமா?' என்று அனுமதி கேட்டு இருக்கிறார். 'அது எங்கள் பாக்கியம்!' என்று பதில் அளித்துள்ளார்கள் பல்கலைக்கழக நிர்வாகிகள். இந்தப் புகழும் இறைவனுக்கே!

இன்பாக்ஸ்

'ஆயிரத்தில் ஒருவன்' பட பிரஸ் மீட்டில் அனைவரும் படத்தைப் பற்றி மட்டுமே பேச, படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி, "இந்தப் படம் ஹிட் ஆச்சுன்னா எனக்கு, செல்வராகவனுக்கு, கார்த்திக்கு நல்ல பேரும், பெரிய சம்பளமும் கிடைக்கும். ஆனா, படத்தில் உழைத்திருக்கும் 2,000 துணை நடிகர்களுக்கு என்ன கிடைக்கும்? ஆனா, அவங்க உழைப்புக்கு முன்னாடி எங்களுடையது எல்லாம் சும்மா!" என்று பெருந்தன்மையாகச் சொல்லி இருக்கிறார். ரெண்டாயிரத்தில் ஒருவர்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

நீத்து சந்திராவின் கில்மா ஜில்மா போட்டோ ஷூட் தந்த 'பத்திக்கிச்சு' பப்ளிசிட்டி காரணமாக ஹாலிவுட் அதிர்ஷ்டம் செல்போன் தட்டியிருக்கிறது. மனோஜ் நைட் சியாமளனின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நீத்து. சமத்து!

மிக மோசமாக உடை அணியும் பிரபலங்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்து இருப்பது பாடகி ஏமி வைன்ஹவுஸ். ஆண்களுள் மைக்கேல் ஜாக்சனுக்கு முதல் இடம். எதுலயும் நீ நம்பர் ஒன்தானே தலைவா!

 
இன்பாக்ஸ்
-
இன்பாக்ஸ்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு