Published:Updated:

நானே கேள்வி.. நானே பதில்!

நானே கேள்வி.. நானே பதில்!

பிரீமியம் ஸ்டோரி

24-06-09
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி.. நானே பதில்!
நானே கேள்வி.. நானே பதில்!
 
நானே கேள்வி.. நானே பதில்!
நானே கேள்வி.. நானே பதில்!

"ஆணவம் எப்போது அழியும்?"

"மனிதன் எவ்வளவோ மகத்தான சாதனைகள் புரிந்துவிட்டான். ஆனால், அவனால் முடியாத ஒரு விஷயத்தை அருணகிரிநாதர் சொல்கிறார் பாருங்கள்,

'வெயிலுக்கு உதவா உடம்பின்
வெறும் நிழல் போல்
கையில் பொருளும் வாராது கண்டீர்
கடை வழிக்கே...'

எவ்வளவு பிரமாண்டமாக இருந்தாலும் வெயிலுக்கு மனிதன் தன் நிழலில் ஒதுங்க முடியாது என்பதுதான் அருணகிரிநாதர் பாடலின் பொருள். கேப்ஸ்யூல் போல ஒரு மகத்தான உண்மையை அடக்கிய இந்த சின்னஞ்சிறு பாடல் வரிகளைப் படிக்கும்போது, நமது சாதனைகள் குறித்த அகங்காரம் சுருங்கிப் போய் விடுகிறது அல்லவா?"

- சி.நாச்சிமுத்து, ஈரோடு.

"தமிழில் பெயர் வைக்கும் ஆங்கில டப்பிங் படங்களுக்கு வரிச் சலுகை அளிக்கலாம்தானே?"

"அதை அரசாங்கம் கொள்கைரீதியாக அலசி ஆராய்ந்துகொள்ளட்டும். ஆனால், அந்தப் படத் தலைப்புகளுக்கு நமது சாய்ஸ்கள்... 'ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ்'- டாவுகளும் பிசாசுகளும், 'ஸ்பைடர்மேன்'- சிலந்தி மாப்பிள்ளை, 'மிஷன் இம்பாஸிபிள்-3' - இது ஆவுறதில்லை (மூணாவது தபா), 'டை அனதர் டே'- இன்னொரு நாள் சங்கு ஊது!', 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'- சார்லி வூட்டு சாகசக்காரிக, 'ஐ நோ வாட் யூ டிட் லாஸ்ட் சம்மர்'- 'மே மாசம் நீ இன்னா கலீஜ் பண்ணேன்னு எனக்குத் தெரியும்!"

- மீ.ரஞ்சனி, தஞ்சாவூர்.

"அமெரிக்காவை இந்தியா மிஞ்சிவிடுமா?"

"முடியாது என்றுதான் தோன்றுகிறது. நம்மூர் நடனப் புயல் தன் குழந்தை இறந்த மூன்று மாதங்களில் காதல் வயப்படுகிறார். ஆனால், அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் மைக் டைசனோ தன் குழந்தை இறந்த மூன்றே வாரங்களில் திருமணம் செய்துகொள்கிறாரே!"

- எஸ்.தினேஷ், விளாத்திக்குளம்.

"தமிழ்நாடு எங்க சார் போகுது?"

"முந்தியெல்லாம் கொலை பண்ணினா ஜெயில்ல போடுவாங்க. இப்பெல்லாம் ஜெயில்லயே கொலை பண்ணிப் 'போடறாங்களே'. எப்பூடி?"

- ஐ.பிரபாகரன், சென்னை-44.

"பெரிய்ய்ய இதிகாசக் கதையைச் சிறு புதுக்கவிதையில் சொல்லிவிட முடியுமா?"

"ஒன்றல்ல; இரண்டு கவிதைகளை எடுத்துக்காட்டலாம்.

'நெருப்பின் நாக்கு
நிரூபித்த கற்பை
வெளுப்பவனின் நாக்கு
அழுக்காக்கிவிட்டது!'

- அப்துல்ரகுமான்

'அப்பனுக்கு
ஆயிரம் மனைவிகள்
எந்தப் பிரச்னையும் இல்லை;
மகனுக்கு
ஒரே ஒரு மனைவி
ஆயிரம் பிரச்னைகள்!' "

- கபிலன்

- மதிபாரதி, சென்னை-91.

"சினிமாவுக்கும் மெகா சீரியலுக்கும் என்ன வித்தியாசம்?"

"மெகா சீரியல் ஆரம்பித்த பிறகுதான் நீண்டுகொண்டே போகும். ஆனால், இப்போது பல இயக்கு நர்கள் சினிமாவை இயக்க எடுத்துக்கொள்ளும் காலமே மெகா சீரியல்களைப் போல நீண்டுகொண்டு போகிறதே!"

- மா.அகிலன், நாகப்பட்டினம்.

எழுதலாம் எல்லோரும்!

கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம். அல்லது செல்போனில் QA (space) உங்க சரக்கை 562636 நம்பருக்கு நறுக்குனு தட்டிவிடுங்க. பளிச் பரிசு நிச்சயம்!


 
நானே கேள்வி.. நானே பதில்!
-
நானே கேள்வி.. நானே பதில்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு