Published:Updated:

நானே கேள்வி.. நானே பதில்!

நானே கேள்வி.. நானே பதில்!


17-06-09
நானே கேள்வி நானே பதில்!
நானே கேள்வி.. நானே பதில்!
நானே கேள்வி.. நானே பதில்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
நானே கேள்வி.. நானே பதில்!

''விரைவில் அறிவாளியாக என்ன வழி?''

நானே கேள்வி.. நானே பதில்!

''கணிதத்தில் சிறந்து விளங்கிய அறிஞர் தாலமி, ஜியாமெட்ரியில் பல விதிகளை உருவாக்கியவர். அவரிடம் ஓர் அரசர் இதே கேள்வியைக் கேட்டார். 'நான் கணிதத்தில் அறிவாளியாக விரும்புகிறேன். அதற்கு ஏதாவது எளிய வழி இருக்கிறதா?' அதற்கு தாலமி சொன்னார், 'அரசே, இந்த நாட்டில் பொதுமக்கள் பயணம் செய்வதற்குக் கரடுமுரடான பாதைகளும், உங்களைப் போல அரசர்கள் பயணம் செய்ய செம்மையான சாலைகளும் உள்ளன என்பது உண்மைதான். ஆனால், கணிதம் கற்பதற்கு எல்லோரும் ஒரே வழியில்தான் பயணம் செய்ய வேண்டும். அரசர்களுக்காகச் செம்மைப்படுத்தப்பட்ட சாலைகள் எதுவும் கணிதத்தில் இல்லை' என்றார்.

ஆம், அறிவை அடைவதற்குக் குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது!''

- ஆர்.ஆர்.பூபதி, திண்டுக்கல்.

''சமீபத்தில் மனம் கனத்தது எப்போது?''

''கா.சிவத்தம்பி, தமிழின் முக்கியமான சிந்தனையாளர். கொழும்பில் வசித்துவருகிறார். ஈழப் போராட்டம் கடும் பின்னடைவைச் சந்தித்த நாட்களில், ஒரு நண்பர் சிவத்தம்பிக்கு போன் செய்து, ஈழ நிலவரம் குறித்து விசாரித்திருக்கிறார். 'நாங்கள் மாலை ஆறு மணிக்கு எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு, வீட்டைப் பூட்டிக்கொண்டு இருந்தோம். ஆனாலும், விடாமல் கதவைத் தட்டி, வெற்றியைக் கொண்டாடும்விதமாக சிங்களர்கள் பால் சோறு கொடுத்து உண்ணச் சொல்கிறார்கள்' என்று துயரம் தோய்ந்த குரலில் சொன்னாராம். அதற்கு நண்பர், 'உங்களுக்குத்தான் சென்னையில் நண்பர்கள் அதிகமாயிற்றே! நீங்கள் சென்னைக்கு வந்து சில நாட்கள் தங்கியிருக்கலாமே' என்று கேட்டிருக்கிறார். அதற்கு சிவத்தம்பி சொன்னாராம்... 'இல்லை. நாங்கள் இனி ஏதாவது ஐரோப்பிய நாடுகளுக்குப் போனாலும் போவோமே தவிர, இந்தி யாவுக்கு மட்டும் வர மாட்டோம். அது எங்களை முதுகில் குத்திவிட்டது' என்று சொல்லியிருக்கிறார். ஒரு மூத்த தமிழ்ச் சிந்தனையாளரின் நிலைமையையும் துயரத்தையும் கேட்டபோது மனது கனத்தது!''

- அஞ்சலி, சென்னை-50.

''தேர்தல் காலத்தில் தனி ஈழத்துக்கு ஆதரவாகப் பேசிய ஜெயலலிதா இப்போது என்ன செய்கிறார்?''

''தனிநாடு டு கொடநாடு!''

- எம்.விஜயராணி, திருப்பூர்.

''மனித வாழ்க்கையின் ஆச்சர்யங்களில் ஒன்று?''

''பல ஆண்டுகள் நம் வாழ்க்கையைப் பாதிக்கப் போகிற முடிவுகளை நாம் சில விநாடிகளில் எடுத்து விடுவது. எம்.ஜிஆரைச் சுட்ட வழக்கில் எம்.ஆர். ராதா வுக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. ஆனால், நன்னடத்தை உள்பட பல்வேறு காரணங்களால் அவரை நான்கரை ஆண்டுகளிலேயே விடுவிக்கச் சொல்லி உத்தரவு வந்தது. அந்த உத்தரவு வந்த நாளன்று காலையில், எதுவும் தெரியாத எம்.ஆர்.ராதா குளிப்பதற்காகத் துண்டு சகிதம் கிளம்பியிருக்கிறார். சிறை அதிகாரி, 'சார், உங்களை ரிலீஸ் செய்தாச்சு! நீங்கள் கிளம்பலாம்' என்றிருக்கிறார். ஆனால் ராதாவோ, எந்தப் பதற்றமும் இல்லாமல் 'இருங்க, குளிச்சிட்டுத்தான் கிளம்புவேன்' என்று குளித்து முடித்த பிறகே கிளம்பியிருக்கிறார். இதே ராதா, முன்பு பதற்றப்படாமல் இருந்திருந்தால், எம்.ஜி.ஆரைச் சுட்டிருக்கவும் மாட்டார்; சிறைக்குச் சென்றிருக்கவும் மாட்டார். பல சமயங்களில் வாழ்க்கையைச் சில விநாடிகளே தீர்மானிக்கின்றன!''

- எஸ்.ராமலிங்கம், மதுக்கூர்.

''வாரிசு அரசியல் தப்பா?''

''யார் சொன்னது... 'மக்களால்', 'மக்களுக்காக' ஆளப்படுவதுதானே ஜனநாயகம்?''

- எம்.சிவசங்கர், மதுரை.

''ஐன்ஸ்டீன் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது...''

'' 'ரிலேட்டிவிட்டி தியரி' என்று சொல்வேன் என்று நினைத்தீர்களா? அதுதான் இல்லை. காந்தியின் பெயர்தான் ஞாபகத்துக்கு வருகிறது. காந்தியைப் பற்றி ஐன்ஸ்டீன் சொன்ன புகழ்பெற்ற ஸ்டேட்மென்ட் இது:

'இன்னும் 50 ஆண்டுகள் கழித்து ரத்தமும் சதையும் கொண்ட இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்!' ''

- வி.மருதவாணன், கும்பகோணம்.

எழுதலாம் எல்லோரும்!
கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம்.
அல்லது செல்போனில் னிகி QA (space) உங்க சரக்கை 562636
நம்பருக்கு நறுக்குனு தட்டிவிடுங்க. பளிச் பரிசு நிச்சயம்!

 
நானே கேள்வி.. நானே பதில்!
-
நானே கேள்வி.. நானே பதில்!