Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்


17-06-09
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
5 கேள்விகள்

மிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம்...

''தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளதே?''

''இது குறித்து அன்னை சோனியா காந்தியும், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும்தான் இறுதி முடிவு செய்வார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் கருத்தை அன்னை சோனியா காந்தி நன்கு அறிவார்!''

5 கேள்விகள்

வேல்முருகன் எம்.எல்.ஏ-விடம்...

''ஆற்காடு வீராசாமியிடம், 'எங்கள் தோல்விக்கு யாரும் காரணம் இல்லை, டாக்டர் அய்யா ஒருவர் மட்டும்தான். அந்த உண்மையை அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உணருகிறார்கள்' என்று கூறிய பா.ம.கட்சி எல்.எல்.ஏ. யார்?''

''பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் ஐயா, சின்னய்யாவின் தலைமையை ஏற்றுக்கொண்டு, சட்டமன்ற உறுப்பினர் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பல ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தவர்கள், பல தியாகங்கள் செய்தவர்கள். அவர்களில் எவரும் இந்தக் கருத்தை ஆற்காடு வீராசாமியிடம் நேரடியாகவோ, தொலைபேசியிலோ கூறியிருக்க முடியாது. வேண்டும்என்றே கட்சியில் குழப்பத்தை உண்டாக்குவதற்காக அவரே கற்பனையாகக் கூறியுள்ளார். அப்படி யாராவது கூறினார்கள் என்றால், அதை நிரூபிக்கத் தயாராக இருக்கிறாரா?''

நரேஷ் குப்தாவிடம்...

''உங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதே?''

''தேர்தலில் ரேஷன் கார்டைக் காட்டி வாக்களிக்க அனுமதிக்காததால் என் மீது வழக்கு போட்டுள்ளார்கள். ஓட்டுப் போடுவதற்குத் தேர்தல் ஆணையம் அறிவித்த 13 ஆவணங்களில் ரேஷன் கார்டின் பெயர் குறிப்பிடப்படவில்லை. தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வோம், அதில் எங்கள் தரப்புக் கருத்துக்களைத் தெரிவிப்போம்!''

அசினிடம்...

'' 'ஜெயம்'ரவியின் திருமண வரவேற்புக்கு வராதது ஏன்?''

'' 'லண்டன் டிரீம்ஸ்', டப்பிங், '19 ஸ்டெப்ஸ்' ஷூட்டிங்னு மும்பைக்கும் கேரளாவுக்கும் மாறி மாறி பறந்துக்கிட்டிருக்கேன். நேரம் கிடைக்காததால் என்னால வர முடியாமல் போச்சு சார்!''

அமீரிடம்...

'' 'இனிமே உங்க படங்கள்ல பஞ்ச் டயலாக் பேசாதீங்க'ன்னு ரஜினிகிட்டே நீங்க சொன்னது ஏன்?''

''இப்ப வர்ற படங்கள்ல கதாநாயகர்கள் எல்லாருமே ரஜினி சார் மாதிரி பஞ்ச் டயலாக் பேசுறாங்க. இதனால பஞ்ச் டயலாக்குக்கே மதிப்பு இல்லாமல் போச்சு. ஒரு விழாவில் ரஜினி சார்கிட்டே இதைப்பத்திச் சொன்னேன். அவருக்கே சிரிப்பு வந்துடுச்சு!''

 
5 கேள்விகள்
-
5 கேள்விகள்