Published:Updated:

எக்ஸ்பிரஸ் குக்கிங்!

எக்ஸ்பிரஸ் குக்கிங்!


17-06-09
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
ராம்கி, படங்கள்: கார்த்தி, செந்தில்
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!

சிக்கனைத் தனியே சமைத்து, பிறகு கிரேவியில் கலப்பது ஷார்ட் கட்! கொத்துக்கறி/போன்லெஸ் சிக்கனை 5 நிமிடங்கள் எண்ணெயில் வதக்கினாலே வெந்துவிடும். வெட்டிய சிக்கன் துண்டுகளை அப்படியே குக்கரில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் மிதமான தீயில் 2 விசில் விட்டால் 5 நிமிடங்களில் சிக்கன் ரெடி! இன்னும் வாசனையாக வேண்டும் என்றால் தயிர்-மசாலா கலவையில், வெட்டிய சிக்கனை 1 மணி நேரம் ஊற வைத்து, பிறகு குக்கரில் வேகவைக்-கலாம்.

சிக்கனைத் தணலில் சுட்டு உண்பது என்பது மொகலாயர்கள் பழக்கப்படுத்திய முறை. தயிர்-மசாலா கலவையில் ஊறவைத்த சிக்கனை தந்தூரி அடுப்பில் சுட்டால் அது தந்தூரி சிக்கன். அதையே ஓவனில் வைத்துச் சுட்டு எடுத்தால், அது ஐரோப்பி யர்கள் விரும்பும் ரோஸ்டர் சிக்கன்.

போன்லெஸ் சிக்கனை டிரையாக உப்பு, காரம், மசாலா சேர்த்து வதக்கினால், அது வறுத்த கறி. இதைத் தேங்காய் எண்ணெயில் வதக்கினால், அது கேரளாவின் 'கோழி வரட்டியது'. சிக்கனைப் புளித் தண்ணீரில் கொதிக்கவிட்டால் கிடைப்பது சிக்கன் குழம்பு. இதுவே ஆந்திராவில் 'கோடி புலுசு'. வெங்காயம்-தக்காளி-தேங்காய்-புளி விழுதுடன் சிக்கனைச் சேர்த்து வேகவைத்தால், அது மசாலா குழம்பு. அதிலேயே தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் சேர்த்தால், அது கேரளாவின் 'நாடன் கோழிக் கறி'. வறுத்து அரைத்த வேர்க்கடலை விழுதை மசாலாவுடன் கலந்து செய்வது 'சால்னா'. தேங்காய், கசகசா, முந்திரி மசாலா விழுதைச் சேர்த்தால் கிடைப்பது குருமா. இவற்றுடன் சிக்கனைத்-தான் சேர்க்க வேண்டும் என்பது இல்லை; மட்டன், மீன் போன்றவற்றையும் சேர்க்கலாம்.

கிரேவிகள் ஊருக்குத் தகுந்த மாதிரி மாறுபடும். பாலாடை, தக்காளி சாஸ் சேர்த்த கிரேவியில் தந்தூரி சிக்கனைச் சேர்த்துச் சமைத்தால், அது இங்கிலாந்தின் மிகப் பிரபலமான 'சிக்கன் டிக்கா மசாலா'. வினிகர், பூண்டு விழுது சேர்த்த கிரேவியில் சமைக்கப்படுவது கோவாவின் 'விண்டாலூ'. வங்காளத்தின் 'சிக்கன் ரெஜாலா' தயிரிலேயே சமைக்கப்படுவது.

கிரேவிக்கு வாசனையூட்ட ரெடிமேட் சிக்கன் மசாலாக்கள் கிடைக்கின்றன. அல்லது தாளித்தோ, வறுத்தோ, அரைத்தோ மற்ற வாசனைப் பொருட்களை சேர்க்கும்விதம் 3-ம் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையை உபயோகித்து டஜன் கணக்கில் சிக்கன் வகைகளை எளிதாகச் செய்து கலக்குங்க!

எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
 
எக்ஸ்பிரஸ் குக்கிங்!
- சமையல் மணக்கும்...
எக்ஸ்பிரஸ் குக்கிங்!