Published:Updated:

இலக்கியத்தின் இழப்பு!

இலக்கியத்தின் இழப்பு!


17-06-09
இலக்கியத்தின் இழப்பு!
இலக்கியத்தின் இழப்பு!
இலக்கியத்தின் இழப்பு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
ரீ.சிவக்குமார்
இலக்கியத்தின் இழப்பு!
இலக்கியத்தின் இழப்பு!

மிழக இலக்கியவாதிகள் சென்னை வந்தால், 'அவசியம் போக வேண்டியவை' பட்டியலில் முக்கியமானது ராயப்பேட்டை நாகராஜா மேன்ஷன். இரண்டு இரும்புக் கட்டில்கள், அவை நிறையப் புத்தகங்கள். கட்டில்களைப் புத்தகங்களால் நிரப்பிவிட்டு உரையாடுவதையும் உறங்குவதையும் தரையிலே வைத்துக்கொள்பவர்தான் ராஜமார்த்தாண்டன். கவிஞர், கவிதை விமர் சகர், பத்திரிகையாளர் எனப் பன்முக ராஜமார்த்தாண் டனுக்கு இலக்கிய உலகில் நண்பர்கள் ஏராளம். 'அப்படியே நிற்கட்டும் அந்த மரம்', 'என் கவிதை' ஆகிய கவிதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்தவர். இவர் முனைப்பெடுத்து கொண்டுவந்த 'புதுக் கவிதை வரலாறு' என்னும் கவிதைத் திறனாய்வு நூலும் பாரதிக்குப் பிறகு தமிழின் மிக முக்கியமான 150 கவிஞர்களின் கவிதை களைத் தொகுத்த 'கொங்குதேர் வாழ்க்கை-2' நூலும் தமிழ் கொண்டாடும் முக்கிய ஆவணங்கள். ஒடிசல் உருவம், அருவியாய் வீழும் தாடி, வேட்டி, சட்டைப் பையில் பேனா என்று நண்பர்களிடையே படிமமாகப் படிந்த ராஜமார்த்தாண்டன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் கவிஞர் விக்கிரமாதித்யன்.

''நாகர்கோவில் பொற்றையடி கிராமத்தில் பிறந்தவர் ராஜமார்த்தாண்டன். தமிழ் எம்.ஏ., முடித்தவர், ராஜகோபால்னு ஒரு நண்பரோடு சேர்ந்து 'கொல்லிப்பாவை'ன்னு காலாண்டு இதழ் நடத்தினார். தமிழின் மிக முக்கிய படைப்புகளைத் தாங்கி வந்த இதழ். அந்த இதழில் அதிகம் எழுதியவர்கள் சுந்தரராமசாமியும் தருமு சிவராம் என்ற பிரமிளும்தான். இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட பிரமிளை முதன்முதலில் தமிழ்நாட்டில் தன் வீட்டில் தங்கவைத்த இலக்கிய வாதியும் ராஜமார்த்தாண்டன்தான்.

சென்னைக்கு வந்த குடும்பத்தைக் கொஞ்ச நாட் களிலேயே ஊருக்கு அனுப்பிவிட்டு, ராயப்பேட்டை மேன்ஷனிலேயே தங்கிவிட்டார். ராஜமார்த்தாண்டன் அறை ஒரு சங்கப்பலகையைப் போல. இலக்கியவாதிகள் குடித்தது, சண்டையிட்டது, நட்பு பாராட்டியது என்று அன்பும் கவிதையும் அறைக்குள் ததும்பி வழிந்தன.

இலக்கியத்தின் இழப்பு!

நான் சென்னையில் என் சொந்த வீட்டைப் போல் தங்கியது அந்த அறையில்தான். சென்னையில் வாழ்ந் தாலும் கடைசி வரை நாகர்கோவில் மனிதராகவேதான் வாழ்ந்து வந்தார். நடந்துபோகிற தூரமென்றால் இலக் கியக் கூட்டங்களுக்குப் போவார். 8 கிலோமீட்டர் தூரம் பயணித்தோ, இரண்டு பேருந்துகளில் மாறி மாறிப் பயணித்தோ அவர் எங்கும் போனதாக ஞாபகம் இல்லை. இடம்பெயர்ந்து நடப்பட்ட தொட்டிச் செடி யைப் போலத்தான் அவர் சென்னையில் வாழ்ந்தார். என்னிடம் இல்லாத ஒரு நல்ல குணம் அவரிடம்இருந்தது. அவர் குடித்துவிட்டு இலக்கியக் கூட்டங்களுக்குப் போனது இல்லை. காலத்தால் அருகிப்போன டைனோசர் மாதிரியான இலக்கியவாதிகளில் அவரும் ஒருவர்!

சிவாஜி, கண்ணதாசன் இருவருக்கும் அவர் தீவிர ரசிகர். நவீன இலக்கியவாதிகள் கண்ணதாசன் மாதிரி யான ஆளுமைகளைப் புறக்கணிக்கிறார்கள் என்ற மனத் தாங்கல் அவருக்கு இருந்தது!'' என்று சொல்லும் விக்கிரமாதித்யனின் குரலில் ஒரு நல்ல நண்பரை இழந்த பதற்றம்.

தேடித் தேடி இலக்கியத் தேன் சேகரித்த ராஜ மார்த்தாண்டன் அஞ்சிறைத்தும்பி போல காலத்தின் சிறகு முளைத்துப் பறந்துபோனது இலக்கிய இழப்பு!

 
இலக்கியத்தின் இழப்பு!
-
இலக்கியத்தின் இழப்பு!