Published:Updated:

கேரியர் கைடன்ஸ் -50 ரூபாயில் ஹிந்தி!

கேரியர் கைடன்ஸ் -50 ரூபாயில் ஹிந்தி!


17-06-09
50 ரூபாயில் ஹிந்தி!
கேரியர் கைடன்ஸ் -50 ரூபாயில் ஹிந்தி!
கேரியர் கைடன்ஸ் -50 ரூபாயில் ஹிந்தி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
கேரியர் கைடன்ஸ் -50 ரூபாயில் ஹிந்தி!
கேரியர் கைடன்ஸ் - கரன்

ஹலோ டாக்டர்!

கேரியர் கைடன்ஸ் -50 ரூபாயில் ஹிந்தி!

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சேர்ப்பிக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,483 இடங்களும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 97 இடங்களும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப் படும்!

விவரங்களுக்கு: new.tnhealth.org

அண்ணா இன்ஜினீயர்!

திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் ஆகிய பாடப் பிரிவுகளில் ஐந்து ஆண்டு எம்.டெக்., படிக்க விரும்பும் மாணவர்கள் ஜூன் 19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: 0462\2554040

தமிழ் வழியில் ஹிந்தி!

தில்லியில் உள்ள 'மத்திய ஹிந்தி இயக்ககம்' அஞ்சல் வழிக் கல்வி மூலம் இந்தி மொழியில் சான்றிதழ், டிப்ளமோ, அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்புகளை நடத்துகிறது. சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளை ஆங்கில மொழி வாயிலாக மட்டுமின்றி, தமிழ் மொழி வாயிலாகவும் கற்கலாம். இவற்றில் சேர விரும்பும் இந்திய மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50 மட்டுமே. அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர விரும்பும் இந்திய மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.200. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15-க்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: துணை இயக்குநர், அஞ்சல் வழி படிப்புகள் துறை, மத்திய ஹிந்தி இயக்ககம், வெஸ்ட் ப்ளாக் -7, ஆர்.கே.புரம், புதுடெல்லி - 110 066.

டெக்னிக்கல் பி.டெக்.,

இந்தியக் கடற்படையில் டெக்னிக்கல் பிரிவுப் பணிகளில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர் கள் ஜூன் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக அளிக்கப்படும் பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு பி.டெக்., பட்டம் வழங்கப்படும்!

ஆன்லைன் மேல் 'பூனை'!

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.) கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு நடத் தப்படும் கேட் (CAT) நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பு களுக்குக் காத்திருங்கள்!

மறக்காதீங்க!

எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கவுன்சிலிங் ஜூலை 6-ம் தேதியும், பொறியியல் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங் ஜூலை 10-ம் தேதியும் நடைபெறும்!

 
கேரியர் கைடன்ஸ் -50 ரூபாயில் ஹிந்தி!
-
கேரியர் கைடன்ஸ் -50 ரூபாயில் ஹிந்தி!