Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்


17-06-09
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

இந்த ஜூன் 2-ம் தேதி, தனது பிறந்த நாளில் பண்ணைப்புரம் போய் வந்திருக்கிறார் இளையராஜா. பொதுவாக, பிறந்த நாளைக் கொண்டாடாத ராஜா, இந்த வருடம் பேரன் யதீஷின் ஆசைக்காக விமரிசையாகக் கொண்டாடி இருக்கிறார். இசைக்கு வயது 66!

இன்பாக்ஸ்

ராம்கோபால் வர்மா இயக்கத்தில், விவேக் ஓபராய்-சூர்யா இணைந்து மிரட்டவிருக்கும் படத்துக்குப் பெயர் 'ரக்த சரித்ரா'. ஒருதாதா அரசியல்வாதி ஆகும் 'புதுப்பேட்டை' ஸ்டைல் கதையில், ஃப்ரேமுக்கு ஃப்ரேம் ரத்தம் தெறிக்குமாம். ரெண்டு சாக்லேட் பையன்கள் இருந்தா முத்தம் தெறிக்கணும்!

இந்திய கிரிக்கெட் அணியின் 'கஜினி', ஸ்பின்னர் ஓஜா! அம்மா பெயரில் ஆரம்பித்து தென்னாப்பிரிக்கா டூர் வரையிலான ஏகப்பட்ட விஷயங்களை உடலில் பச்சை குத்தி வைத்திருக்கிறார். பச்சை மேட்டர் தெரியக் கூடாது என்பதற்காக சட்டை யைக் கழற்றுவதே இல்லை ஓஜா. உங்க 'முத்தழகி' பேரும் இருக்கு இல்ல..?

இன்பாக்ஸ்

ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனதில் கொஞ்சம் ரிலாக்ஸாகிவிட்டார் கருணாநிதி. அடுத்த அட்டாக்காக, 'நீ இன்றி நான் இல்லை' என்றபடத் துக்குக் கதை, வசனம் எழுதுகிறார் முதல்வர். அவர் எழுதிய 'சுருளிமலை' என்ற நாவலைத் தழுவி உருவாக்கப்படும் இப்படத்தின் நாயகி மீரா ஜாஸ்மின். எதையும் தாங்கும் இதயம்!

இன்பாக்ஸ்

இனிமேல் விக்கெட் கீப்பிங் செய்வதில்லை என்று தேர்வுக் குழுவோடு மல்லுக்கட்ட ஆரம்பித்திருக்கிறார் டோனி. 'இனி பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் மட்டுமே டீமில் நீடிக்க முடியும். இல்லையென்றால் கங்குலி மாதிரி என்னையும் மாற்றிவிடுவார்கள்' என்று நண்பர்களிடம் புலம்ப ஆரம்பித்திருக்கிறார் கேப்டன். சேவாக்கோடு பழம் விட்டாச்சா..?

இரண்டு நிமிட விளம்பரமோ, இரண்டு மணி நேரப் படமோ இரண்டுக்கும் ஒரே சம்பளம் கேட்கிறார் தீபிகா படுகோன். இரண்டரைக் கோடி ரூபாய்! கொடுக்கலாம் பாசு!

இன்பாக்ஸ்

சல்மான்கான் தான் காம்பியரிங் செய்யும் டி.வி. ஷோவில் கலந்துகொண்ட கரீனா கபூரிடம், 'அதிகப்படி டயட்டும் எக்சர்சைசும் முகத் தசைகளைக் கடினமாக்கும். கொஞ்சம் சதைப்பிடிப்போடு இருக்கும் பெண்களைத்தான் ஆண்கள் விரும்புவார்கள்!' என்று ஸ்டேஜில் வைத்தே அட்வைஸியிருக்கிறார். இதனால் சைஸ் ஜீரோ இடுப்பழகிக்கு கான் மேல் கொஞ்சம் எரிச்சலாம். நீதானே ஹிந்தி போக்கிரி!

'பா' படத்தில் தன் மகன் அபிஷேக் பச்ச னுக்கே மகனாக நடிக்கிறார் அமிதாப் பச்சன். இதற்காக எந்த கெட்டப் சேஞ்சும் பண்ணவில்லை அமிதாப். இளம் வயதிலேயே முதுமைத் தோற்றம் அடையும் இளைஞனைப் பற்றிய கதையில், செம ரொமான்ஸ் காட்டிஇருக்கிறாராம் பிக் பி. படம் பார்க்க பாலிவுட்டே ஆர்வமாகக் காத்திருக்கிறது. ரஜினி கவனிக்க!

'ஸ்லம்டாக் மில்லியனர்' இயக்குநர் டேனி பாயலின் அடுத்த படத்திலும் மும்பைதான் ஆடுகளம். பத்திரிகையாளர் சுகேது மேதா எழுதிய, Maximum City: Bombay Lost and Found என்ற மும்பையின் இரவு வாழ்க்கை பற்றிய நாவலை, த்ரில்லர் சினிமாவாக எடுக்க இருக்கிறாராம். அநேகமாக அமீர்கான் ஹீரோவாக இருக்கலாம். இன்னொரு ஆஸ்கர் பார்சல்!

இன்பாக்ஸ்

விருந்துவைக்க ரெடியாகிறது வேட்டைப் புலி. டெல்லி மீடியா ரவுண்ட் கட்டி சுற்றி வந்ததில், ஜே.கே.ரித்தீசுக்கு எக்கச்சக்க சந்தோஷம். தன் கொடியை பாலிவுட்டிலும் பறக்கவிட முடிவு செய்திருக்கிறார். தான் நடிக்க இருக்கும் 'வேட்டைப்புலி' படத்தை மெகா பட்ஜெட்டில் எடுத்து, ஹிந்தியில் 'துஷ்மன்' என்ற பெயரில் டப் அடிக்க முடிவெடுத்து இருக்கிறார் அதிரடி எம்.பி. இருந்தாக்கா அள்ளி ஆவோஜி, இல்லையின்னா சொல்லி அச்சாஜி!

இன்பாக்ஸ்

'காவலர் நமது சேவகர்!' என்று போலீஸின் பெருமையைப் பேசும் ஒரு மணி நேரப் படமொன்றை எடுத்த தமிழக காவல் துறை, அடுத்த ஆட்டத்துக்குத் தயார். 'இளைஞர்களைக் கவர்ந்து இழுக்கும் அளவுக்கு இன்னொரு குறும்படம் எடுக்க வேண்டும்' என்று அசைன்மென்ட் வழங்கப்பட்டதும், தமிழக ஐ.ஜி. திரிபாதி, 'படத்துக்கு இசையமைக்க முடியுமா?' என்று ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கிறார். ஆச்சர்யமாக ரஹ்மானும் ஓ.கே. சொல்ல, பரபரப்பாகத் தயாராகிறது படம். இதான் ஒரிஜினல் 'ஷூட்டிங்'!

இன்பாக்ஸ்

ஆஸ்கருக்குப் பிறகு ஹாலிவுட்டிலும் ஏ.ஆர்.ரஹ்மான் ஃபீவர். அவர் அறிமுகமான 'ரோஜா'வை ஆங்கிலத்தில் டப் அடித்து அங்கே ரிலீஸ் பண்ணப்போகிறார்கள். டைட்டில்-'ரோஸ்.' ரஹ்மான்தான் மாஸ்!

இன்பாக்ஸ்

'டெல் மான்டே' என்ற அமெரிக்க உணவுத் தயாரிப்பு நிறுவனம், ஜேம்ஸ்பாண்டாக நடிக்கும் டேனியல் கிரேய்க்கின் டாப்லெஸ் உருவத்தில் ஐஸ்க்ரீம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஏகப்பட்ட பெண்களிடம் எடுத்த சர்வேயில், டேனியலுக்குத்தான் எக்கச்சக்க டிமாண்ட். 'லைசென்ஸ் டு சில்' என்று 'லிமிடெட் எடிஷனாக' தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தக் குச்சி ஐசுக்கு இப்போதே ஏகப்பட்ட அடிதடி. நக்கல் நாயகன்!

இன்பாக்ஸ்

சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் 40 நாடுகள் பங்கேற்ற, 'ஆசிய கண்டத்தின் செஸ் சாம்பியன்' போட்டியில் படா கிராண்ட் மாஸ்டர்களை எல்லாம் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் சூரியசேகர் கங்குலி. ஆசிய அளவிலான செஸ் போட்டியில் சாதித்த முதல் வங்காளி இவர்தான் என்பதால், கொண்டாடு கிறது கொல்கத்தா. வங்கத்திலிருந்து இன்னொரு புலி!

சென்னையின் புது கமிஷனர் ராஜேந்திரன், கடைநிலைக் காவலர்கள் 'அன்அஃபீஷியல்' வேலைகளைச் செய்யும் ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழிக்கவிருக் கிறார். முதல் கட்டமாக கமிஷனர் ஆபீஸ் கேன்டீனில் சமையல் வேலை பார்த்த போலீஸ்காரர்களை டூட்டிக்கு மாற்றியிருக்கிறார். சல்யூட்!

இன்பாக்ஸ்

எக்கச்சக்க கோபத்தில் இருக்கிறார் மெக்ராத். ஐ.பி.எல். போட்டி களுக்காக டெல்லி டேர் டெவில் அணியில் இடம்பெற்றிருந்தாலும், அவரது ஃபிட்னெஸைக் காரணம் காட்டி, பெவிலியனிலேயே உட்கார வைத்துவிட்டார் சேவாக். 'என்னை எதற்கு டெல்லி அணியில் தேர்ந் தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. அநேகமாக அடுத்த வருட ஐ.பி.எல். போட்டிகளில் நான் கலந்துகொள்ள மாட்டேன்!' என்று விரக்தியாகப் பேட்டியளிக்கிறார் மெக். ரெண்டு பெக் போடுங்க..!

 
இன்பாக்ஸ்
-
இன்பாக்ஸ்