Published:Updated:

இதைப் படிக்காதீங்க!

இதைப் படிக்காதீங்க!

இதைப் படிக்காதீங்க!
இதைப் படிக்காதீங்க!
இதைப் படிக்காதீங்க!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இதைப் படிக்காதீங்க!
இதைப் படிக்காதீங்க!

தலைவர் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல வந்த கல்வித் தந்தையரிடம் மந்திரி ஒருவரும் எனக்கு எதுவும் கிடையாதா என்று கேட்டுத் தனி வசூல் நடத்தினாராம்!

தலைமையுடன் மனச் சஞ்சலத்தில் இருக்கும் அசெம்பிளி ஆட்களுக்கு வலை வீசி, ஆளும் தரப்பு பக்கமாகத் திருப்ப உளவுத் துறைக்கு முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம்!

மகனை உள்ளூருக்கே வரக் கூடாது என்று அப்பா கட்டளை இட்டுள்ளதால் தலைநகரத்தில் தஞ்சம் அடைந்துள்ளார் பெரிய வீட்டுப் பிள்ளை. இங்கு மோசமான சேர்க்கைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனவாம்!

பழைய உறவைப் புதுப்பிக்க மாஜி மனைவிக்கு போன் செய்து பேசினாராம் சர்ச்சை நாயகர். ஆனால், எதிர்ப் பக்கம் இருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம். மனிதர் மனம் உடைந்துவிட்டாராம்!

அம்மா கட்சியில் இருந்து வந்த தூதர் டெல்லியில் அரசரைச் சந்தித்தாராம். தன் எதிர்பார்ப்புகளைச் சொல்லி அனுப்பி இருக்கிறாராம். விரைவில் ஐக்கியம் நிச்சயம்!

முழுமையாக முதுகுவலி தீராததால் மாதந்தோறும் வலி நிவாரணி ஊசி போட வேண்டுமாம். முதல்வரின் திடீர் ஆஸ்பத்திரி விசிட்டுக்குக் காரணம் இதுதானாம்!

 
இதைப் படிக்காதீங்க!
இதைப் படிக்காதீங்க!