Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

நரேஷ் குப்தாவிடம்...

''ஐந்து தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் எப்போது?''

5 கேள்விகள்

"சம்பந்தப்பட்ட கலெக்டர்களுடன் ஆலோசித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்படும். ஆகஸ்டு 24-ம் தேதிக்குள் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்!''

வேல்முருகன் எம்.எல்.ஏ-விடம்...

''அரசியல் கட்சியான பிறகு பா.ம.க. ஏன் மீண்டும் சாதிச் சங்கமாகக் கூனிக் குறுக வேண்டும் என்று முதல்வர் கேட்டுள்ளாரே?''

''21 உயிர்களைப் பறிகொடுத்து தமிழகத்தின் 108 சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்ததற்காக ஒன்றரை லட்சம் வழக்குகளைச் சுமந்த இயக்கம் பா.ம.க. சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் பார்வை. அது பற்றி கலைஞரின் கருத்து குறித்து எங்களுக்குக் கவலை இல்லை!"

சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம்...

''மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை இரண்டு வாரங்கள் கடந்தும் அரசால் தீர்க்க முடியாதது ஏன்?''

"பேச்சுவார்த்தைக்கும் அவர்கள் தயாராக இல்லை என்றபோதே பின்னால் இருந்து சிலர் தூண்டிவிடுவது தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் மீது விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்!''

ரம்பாவிடம்...

''நீங்கள் தி.மு.க-வில் சேர தேதி கேட்டிருக்கிறீர்களாமே?''

''முதல்வர் சாரின் 'பொன்னர் சங்கர்' பட ஃபங்ஷன்ல என்னையும் குத்துவிளக்கு ஏத்தச் சொன்னதால, இப்படி ஒரு செய்தி வந்திருக்கலாம். அரசியலில் எனக்கு ஆர்வம் இல்லை!''

வெற்றிகொண்டானிடம்...

''ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி இன்னமும் தி.மு.க-வை மிரட்டுகிறதா?''

''மிரட்டல் அல்ல. வேண்டுகோள் வைத்துள்ளார்கள். இறுதி முடிவு சோனியா தானே எடுக்க வேண்டும்!''

 
5 கேள்விகள்
5 கேள்விகள்