நானே கேள்வி.. நானே பதில்!

எழுதலாம் எல்லோரும்!

கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம். அல்லது செல்போனில் QA (space) உங்க சரக்கை 562636 நம்பருக்கு நறுக்குனு தட்டிவிடுங்க. பளிச் பரிசு நிச்சயம்!

''அற்பப் புத்தி என்றால் என்ன?''

''அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் வழக்க றிஞராக இருந்தபோது ஒரு பணக்காரர் வழக்காடு வதற்காக லிங்கனிடம் வந்தார். ஏழை ஒருவர், அவருக்கு ஐந்து டாலர் கடனாகத் தர வேண்டி இருந்தது. 'வெறும் ஐந்து டாலருக்காகவா வழக்கு போடப் போகி றீர்கள்?' என்று லிங்கன் எவ்வளவோ சொல்லியும், அந்தப் பணக்காரர் கேட்பதாக இல்லை. 'சரி, எனக்கு வழக்காடுவதற்கான கட்டணமாக 10 டாலர் தாருங்கள்' என்று 10 டாலரை வசூலித்த லிங்கன், அதில் ஐந்து டாலரை ஏழையிடம் கொடுத்து கடனை அடைக்கச் சொன்னார். பணக்காரரும் மகிழ்ச்சியோடு போனார். அந்தப் பணக்காரருக்கு இருந்ததற்குப் பெயர்தான் அற்பப் புத்தி!''

- சு.காந்திராஜ், செங்கல்பட்டு.

''சடாரென்று மனதைத் தைத்த வரிகள்?''

''கல்வி என்ற பெயரில் நம் விருப்பங்களையும்தேர்வு களையும் குழந்தைகளின் மீது திணிப்பதைக் குறித்த நூல் ஒன்றைப் படித்துக்கொண்டு இருந்தேன். 'வாசிப்பு மற்றும் தேர்வு முறையின் அரசியல்' என்கிற அந்த நூலில் உள்ள கவிதை ஒன்று யதார்த்தத்தை முகத்தில் அறைந்தது. அந்தக் கவிதையின் சில வரிகள்...

'குழந்தைகளை நம்புங்கள்
கற்றுக்கொடுக்கும்
நம் பெருமுயற்சிகள்தான்
அவர்களைக் கசப்பாக்குகிறது.
நமது அவநம்பிக்கை
அவர்கள் கற்றலைத் தடுக்கிறது.
குழந்தைகளை நம்புங்கள்.
அவர்களுக்குக் கற்றுக்கொள்ள
எப்போதும் ஆசை.
குழந்தைகளை நம்புவதற்கு
நாம் முதலில்
நம்மை நம்ப வேண்டும்.
ஆனால்,
நாம் குழந்தைகளாக இருந்தபோது
நம்மை நம்ப முடியாது என்று
நமக்குக் கற்பிக்கப்பட்டது.' ''

- கே.ராணி, திருவாரூர்.

'''மாதம் மும்மாரி பொழிகிறதா அமைச்சரே' என்று நாடகங் களில் மன்னர்கள் வசனம் பேசுவதைக் கேட்கும்போது என்ன தோன்றும்?''

''அடப் பாவிகளா, ஜன்னல் கதவைத் திறந்து பார்த்திருந்தால்கூட சாரல் அடிப்பது தெரிந்திருக்குமே என்று!''

- பா.ராகவன், பொள்ளாச்சி.

''ஓரினச் சேர்க்கைக்குத் தண்டனை வழங்கும் அரசியல் சட்டப் பிரிவை மத்திய அரசு நீக்குவதாக அறிவித்திருப்பதை எதிர்த்து அனைத்து மதத் தலைவர்களும் ஒன்று சேர்ந்திருக்கிறார்களே?''

''அப்பாடா! இதிலாவது மதங்களை மறந்து ஓரின மாகச் சேர்ந்து இருக்கிறார்களே!''

- சீதா கோபாலன், சீர்காழி.