இன்பாக்ஸ்

மைக்கேல் ஜாக்சனின் உடைமைகளுக்கான அனைத்து ரைட்ஸ்களும் அவரது தங்கச்சி ஜேனட் ஜாக்சன் வசம் இருக்கிறது. ஜாக்சன் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விட்டு, வரும் வருமானத்தில் 'எம்.ஜே. பவுண்டேஷன்' என்கிற தொண்டு நிறுவனத்தை ஆரம்பிக்க இருக்கிறார் ஜேனட். நல்லது பண்ணுங்க தங்கச்சி!

வெள்ளை அறிக்கை கேட்கும் லாலுவுக்குக் கறுப்புப் பக்கம் இருக்கிறது என்று கட்டம் கட்ட ஆரம்பித்திருக்கிறார் பீகார் முதல்வர் நிதீஷ்குமார். ரயில்வேயில் லாலு லாபம் காட்டியது 'சத்யம்' கம்ப்யூட்டர்ஸ் பாணி என்று புகார் கிளப்புது நிதீஷ் குரூப். பத்தவெச்சுட்டீங்களா பாசு!

சீமானின் இணை இயக்குநர் 'ஐகோ' இயக்க இருக்கும் படத்தில் சீமான்தான் ஹீரோ. கூடவே, முக்கிய ரோலில் நடிக்கச் சம்மதித்திருக்கிறார் இயக்குநர் சசிகுமார். படத்தின் தலைப்பு 'பேரன்பும் பெருங்கோபமும்' தம்பி வருகிறான்!

புதிய எம்.பி-க்களின் பயோடேட்டாவை வெளியிட்டு இருக்கிறது நாடாளுமன்றம். இதில் தன்னை விவசாயியாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள் சில எம்.பி-க்கள். அதில் முதலிடத்தில் இருப்பது ராகுல் காந்தி. அப்படியே அப்பா!

தன் பெயரில் புதுசாக வெப்சைட் துவக்கிஇருக்கும் மம்மூட்டி, ரத்த வங்கிகள் பற்றிய குறிப்புகளோடு, ரத்த தானம் தரும் தன் ரசிகர்களைப் பற்றிய தகவல்களையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். ரசிக ரத்தங்கள்!

டெஸ்ட் கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கருக்கு இப்போ 60 வயசு. ஆசி வாங்க புட்டபர்த்தி போனவர், இன்னும் கிரிக்கெட்டில் சோபிக்காத தன் மகன் ரோஹன் கவாஸ்கர் பற்றி வருத்தம் சொல்ல, சாய்பாபா நாலு நம்பிக்கை வார்த்தைகள் சொன்னாராம். தெம்பாய் திரும்பி வந்திருக்கிறார் தந்தை. ரா... ரா... ரோஹா!

'தோரணை' சுருண்டாலும் விஷால் அடுத்த ஆட்டத்துக்கு ரெடி. சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன் பாணி படமான 'முகமூடி'யை அணிய இருக்கிறார் விஷால். சூர்யா பண்ணுவதாக இருந்து டிராப் ஆனதில் சுருண்டு போய்இருந்த இயக்குநர் மிஷ்கினுடன் இப்போ பேச்சுவார்த்தையில் இருக்கிறார் விஷால். புரட்சி முகமூடி!

'ஆடுகளம்' படப்பிடிப்புக்காக மதுரையில் டாப் அடித்திருக்கும் தனுஷ் - வெற்றிமாறன் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணி, தூங்கா நகரத்தை ராத்திரி முழுக்க ரவுண்ட் அடித்து மகிழ்கிறார்கள். எத்தனை ரவுண்டு அடிப்பீங்க?

'என்னய்யா, உங்க டைரக்டர் இப்போ என்ன பண்ணுறான்?' 'நல்ல படம் எடுக்கச் சொல்லி அவனுக்குப் புத்தி சொல்லுங்கய்யா!' - இப்படி தன்னைப் பற்றியே தன் அசிஸ்டென்ட்களிடம் கேள்வி கேட்டு அவர்களைச் சிரிக்கவைப்பது பாலாஜி சக்திவேலின் லந்து ஹாபி. 'வழக்கு' எப்படிப் போய்ட்டு இருக்கு சார்?

மோகன்லாலுக்கு கௌரவ லெப்ட்டினென்ட் ஜெனரல் பதவி கொடுத்து கௌரவித்திருக்கிறது இந்திய ராணுவம். பதவி ஏற்ற கையோடு யூனிஃபார்மைக் கழற்றாமல் டெல்லி டு திருவனந்தபுரம் பறந்து வந்து சிலிர்த்திருக்கிறார் லால். கேப்டனுக்கு எப்போ மிலிட்டரி பதவி கிடைக்கும்?

ஜி-8 மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த 16 வயசு பிரேசில் மாணவி மெயாரா டவேரஸை, ஒபாமாவும், ஃபிரெஞ்சு அதிபர் சர்கோஸியும் 'சைட்' அடிப்பது போல எக்குத்தப்பாக போட்டோவில் க்ளிக் ஆகி இருக்கிறது. ச்சேச்சே...இருக்காதப்பா!

இந்திய ஐ.டி. மார்க்கெட்டில் இளம் ரத்தம் பாய ஆரம்பித்திருக்கிறது. ஹெச்.சி.எல். நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக ஷிவ் நாடாரின் 27 வயது மகள் ரோஷினி நாடார் பொறுப்பேற்க, அதே தினத்தில் விப்ரோவின் ஆஸிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் பிரேம்ஜி விப்ரோவுக்குப் பொது மேலாளராகி இருக்கிறார். வாரிசுகள் வாரம்!

விஜய் மல்லையா தனது புதிய வீட்டை பெங்களூரின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் பிரம்ம்ம்மாண்டமாகக் கட்டி வருகிறார். கோடிகளை விழுங்கி எழும்பும் அந்தப் பளிங்கு மாளிகை இப்போதே பெங்களூரின் பரபர டூரிஸ்ட் ஸ்பாட்டாகிவிட்டது. பீர் காய்ச்சுவீங்கல்ல!

ஜூலை 10-ம் தேதி ஹைதராபாத் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற சானியா-சொஹரப் நிச்சயதார்த்தத்தில் மீடியாவுக்கு ஏகக் கெடுபிடி. மகேஷ் பூபதி, சிரஞ்சீவி என வி.ஐ.பி-க்களிலேயே வெகு சிலருக்கு மட்டுமே அழைப்பு. இங்கிலாந்தில் எம்.பி.ஏ., படிக்கப்போகும் சொஹரப், இரண்டு வருடங்கள் கழித்து இந்தியா திரும்பியதும்தான் திருமணமாம். எங்கிருந்தாலும் வாழ்க!

விம்பிள்டன் சாம்பியன்களுக்கான லண்டன் டின்னர் பார்ட்டியின் ஹீரோ-ஹீரோயின் ரோஜர் ஃபெடரர்-செரீனா வில்லியம்ஸ்! இது வரை 15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ரோஜருக்கு, இது ஆறாவது விம்பிள்டன் பட்டம். எந்த டென்னிஸ் வீரரும் எட்டாத உயரம். வீனஸ் வில்லியம்ஸின் ஹாட்ரிக் விம்பிள்டன் வெற்றிக் கனவைத் தகர்த்ததால், செரீனாவுக்கும் இந்த வெற்றி ஸ்பெஷல். மிக்ஸட் டபிள்ஸ் போடுங்க!

அஜய் தேவ்கன் தயாரித்து நடிக்கும் 'ஆல் தி பெஸ்ட்' படத்துக்கு நாயகி பிபாஷா பாசு. இரவு பகல் பாராமல் பிபாஷா கடுமையாக நடித்துக் கொடுத்ததில் நெகிழ்ந்த அஜய் தேவ்கன் அம்மணிக்கு லேட்டஸ்ட் 'பிளாக்பெர்ரி' போனை கிஃப்ட் கொடுத்திருக்கிறார். கஜோலுக்கு மேட்டர் தெரியுமா?

இதயத்தைச் சீராக்க ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை முடித்து வீடு திரும்பி இருக்கும் பால் தாக்கரேவுக்குப் புகை பிடிக்கத் தடா விதித்திருக்கிறார்கள் டாக்டர்கள். ராஜ் தாக்கரே கிளப்பும் புகை போதாதா?