Published:Updated:

விகடன் வரவேற்பறை

விகடன் வரவேற்பறை


 
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை!
விகடன் வரவேற்பறை

காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே
அ.மார்க்ஸ்
வெளியீடு: புலம், 332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5.
பக்கம்: 200 விலை: ரூ.100

விகடன் வரவேற்பறை

காஷ்மீரின் அழகு கவிதையாக வடிக்கப்பட்ட காலம் கரைந்து, அதன் அவலம் மட்டுமே இப்போது செய்தியாகிறது. அ.மார்க்ஸ் இதுவரையிலான காஷ்மீரின் பிம்பங்களை உடைத்தெறிகிறார். திரித்துக் கூறப்பட்ட செய்திகள் நேர் செய்யப்படுகின்றன. காஷ்மீரில் தீவிரவாதம் வளர்ந்த விதத்தின் அடிப்படை ஆராயப்படுகிற புத்தகம். அவசியமான வாசிப்புக்குத் தயாராகுங்கள்!


சுடச்சுட!
new.freehot-tips.com

விகடன் வரவேற்பறை

பொருளாதாரம், பயணம், கார், கம்ப்யூட்டர், ஷாப்பிங் பற்றி நாலு வரி டிப்ஸ் தொடங்கி 40 வரிக் கட்டுரைகள் வரையிலான தொகுப்பு
இத்தளம். உபயோகப்படுத்திய காரை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள், குறைந்த செலவுச் சுற்றுலா, வீட்டு கம்ப்யூட்டரின் வேகத்தை அதிகரிப்பது எப்படி போன்ற தலைப்புகளில் 400 விஷயங்கள் வரை சொல்கிறார்கள். நடுத்தர வர்க்கத்துக்கு அவசியமான, அத்தியாவசியமான விஷயங்கள் எளிமையாக விவரிக்கப்பட்டு இருப்பது பிளஸ்!


வாசிக்க... நேசிக்க!
http://online-tamil-books.blogspot.com/

விகடன் வரவேற்பறை

புத்தக விமர்சனங்களால் மட்டுமே நிரம்பிய வலைப்பூ. அரசியல், இதிகாசம், கதைகள், கட்டுரைகள், குறுநாவல், புதினம், பயணம், பொருளாதாரம், மொழிபெயர்ப்பு, வரலாறு எனப் பல்வேறு தளம் சார்ந்த புத்தகங்கள் குறித்த விமர்சனங்களும் உண்டு. ஒரு மொழிபெயர்ப்பு நாவலைப் பற்றிப் பேசும்போது, அந்த மொழிபெயர்ப்பாளர் குறித்த தகவல்களை இணையத்தில் பெறுவதற்கான தகவல் சுட்டியை இணைத்திருப்பது, பதிப்பகத்தின் முகவரி, நூலில் உள்ள அடிப்படை விஷயங்கள் குறித்த இணையத்தொடர்பு போன்றவையும் கொடுக்கப்பட்டு இருப்பது உபயோகமானது. வங்காள எழுத்தாளர் ஆஷாபூர்ணா தொடங்கி கேரள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் வரை பல்வேறு திசைகளில் இருந்தும் பல்வேறு ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் வலைப்பூ!


கலர்ஸ்
இயக்கம்: ஸ்ரீகந்தன்
41/16, 11-வது

விகடன் வரவேற்பறை

டிரஸ்ட் கிராஸ் தெரு, மந்தைவெளிப்பாக்கம், சென்னை-28.

ர் இசைக் கலைஞனையும் ஓவியனையும் முன்வைத்து இந்தியாவின் வறுமை நிலையைச் சொல்லி இருக்கிறார்கள். வறுமை நீக்க எவர் முன்வந்தாலும், அதற்குத் தடைபோடுகிற முயற்சிகள் கவிதையாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீகந்தனின்
அக்கறையும் கவனிப்பும் குறிப்பிட வேண்டியது!


அழகர் மலை
இசை: இளையராஜா
வெளியீடு: ஃபைவ் ஸ்டார் ஆடியோ
விலை: ரூ 50

விகடன் வரவேற்பறை

ப்போதும் போலான இளையராஜா இசை. வாலி எழுதி இளையராஜா பாடும் 'உலகம் இப்போ...' பாட்டின் மெட்டில் ஒரு விட்டேற்றித்தனம் வெளிப்படையாக இருக்கிறது. 'என்ன செஞ்சாலும்...', 'கிழக்கு வெளுக்குது...', 'உன்ன எனக்கு...', பாடல்கள் பக்கா கிராமக் கதை என்பதைக் காட்டுகின்றன. 'உன்ன எனக்கு... பாட்டில் பவதாரிணியின் குரலில் இன்னும் மழலை மாறவில்லை. அதே போல இளையராஜாவும் குரலில் இளமை பராமரிக்கிறார். மது பாலகிருஷ்ணன், யேசுதாஸை இமிடேட் செய்வதைக் குறைத்துக்கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். முத்துலிங்கம், மு.மேத்தா போன்ற கவிஞர்களோடு நா.முத்துக்குமார், சினேகன் மாதிரி இந்தத் தலைமுறைக் கவிஞர்களும் பாட்டு எழுதியிருப்பது, பாடல்களுக்கு தனி நிறத்தைக் கொடுக்கிறது. ஒன்று உறுதி. இளையராஜா, இளம் இசையமைப்பாளர்களை ஆசிர்வதிக்கிற இடத்துக்கு வந்துவிட்டார்!

 
விகடன் வரவேற்பறை
விகடன் வரவேற்பறை