விகடன் பொக்கிஷம்
தொடர்கள்
Published:Updated:

இதைப் படிக்காதீங்க!

இதைப் படிக்காதீங்க!


08-07-09
இதைப் படிக்காதீங்க!
இதைப் படிக்காதீங்க!
இதைப் படிக்காதீங்க!
 
இதைப் படிக்காதீங்க!

நிருபரை மிரட்டிய மேட்டரில் சிக்கிய எம்.பி-யை சென்னை யில் இருந்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினாராம் இளையவர். சப்த நாடியும் அடங்கிவிட்டதாம் கடலோரக்காரருக்கு!

பிரமாண்ட மாளிகையில் இருக்கும் மகனது சம்பாத்தியம் கடந்த மூன்றாண்டுகளில் பல கோடி ஆகிவிட்டதாம். சி.பி.ஐ-க்கு மொட்டைக் கடிதம் அனுப்பிவிட்டு அமைதியாகிவிட்டதாம் எதிர்க் கட்சி!

அமைச்சருக்கு உதவிகரமாக இருந்தவருக்கு கல்விநிறுவனத் தில் உயர்பதவி கொடுக்கப்பட்டது. அங்கு அவரது ஆட்டம்,பாட்டம், கொண்டாட்டம் எல்லை மீறிப் போய்விட்டதாம்!

சொந்த டி.வி-யில் காட்டிய செய்தியில் ஏதோ வருத்தமாம். காலையிலேயே காரை எடுத்து வந்து நேரில் திட்டிவிட்டுத் திரும்பி னாராம் தலைவர்!

கட்சியைவிட்டுப் போகப் போகிறார்... அங்கே பேசிவிட்டார் என்று அம்மா கட்சியின் பணிவுப் பிரமுகர் பற்றி ஒரு வாரமாக வதந்திகள். ஆள் அப்செட் ஆகி, சட்டசபையில்கூட அதிக சத்தம் காட்டாமல் அடங்கிவிட்டார்!

கதர்க் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியைப் பிடிக்க சட்டப் பிரமுகர் பகீரத முயற்சியில் இறங்கி உள்ளாராம். தனக்கு வேண்டிய தலைகளை மட்டும் அழைத்து ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி கொடுத்து ஆலோசனை கேட்டுள்ளாராம்!

 
இதைப் படிக்காதீங்க!
-
இதைப் படிக்காதீங்க!