விகடன் பொக்கிஷம்
தொடர்கள்
Published:Updated:

நானே கேள்வி.. நானே பதில்!

நானே கேள்வி.. நானே பதில்!


08-07-09
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி.. நானே பதில்!
நானே கேள்வி.. நானே பதில்!
 
நானே கேள்வி.. நானே பதில்!

"உலகின் முதல் அகதிக் கவிதை எது?''

நானே கேள்வி.. நானே பதில்!

"அந்தப் பெருமையும் நம்முடையதே! 'அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையோம் எம் குன்றும் பிறர் கொள்ளார்' - பறம்பு மலையை ஆண்டு வந்த பாரியின் மகள்களாகிய பாரி மகளிர் என்று அழைக்கப்படும் அங்கவையும் சங்கவையும் பாடிய பாடல் இது. தம் தந்தையையும் நாட்டையும் இழந்து கபிலரோடு அகதியாகப் புலம்பெயர்ந்தபோது பாடிய பாடல்தான் முதல் அகதியின் பாடல். பறம்பு மலையில் இருந்து உருண்ட பாரி மகளிரின் கண்ணீர்த் துளிகளின் ஈரத்தை இந்தப் பாடலில் உணர முடியும். தமிழர்களின் மொழி மட்டும் பழைமை வாய்ந்தது அல்ல, அவர்களின் அகதி வாழ்க்கையும் கூடத்தான் என்பது துயரமானதே!''

- ஆ.ராசா, திருவாரூர்.

"சமீபத்தில் அதிசயித்த விஷயம்?''

"சே குவேரா... புரட்சிக்கான இலக்கணம். இப்போது அவருடைய பேத்தி லிடியா குவேரா, மிருக வதையை எதிர்த்து வெறுமனே கேரட்டுகளால் ஆன மாலையை அணிந்துகொண்டு அரை நிர்வாணமாகப் போஸ் கொடுத்து இருக்கிறார். இதுவும் ஒருவகைப் புரட்சியோ?!''

- அ.சுஹைல்ரகுமான், திருச்சி.

"சமீபத்தில் ரசித்த காமெடி?''

"தயாநிதி மாறன் ஜெயலலிதா மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகும்படி ஜெயலலிதா வுக்குச் சம்மன் அனுப்பியது கோர்ட். இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த பதில் மனுவில் ஒரு வரி... 'தமிழக மக்களின் நலனுக் காகவே என் முழு வாழ்க்கையையும் நான் அர்ப்ப ணித்து இருப்பதால், இந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் என்னால் ஆஜராக இயலாது!''

- எம்.ரேவதி, ஈரோடு.

"யோசிக்கவைத்த கவிதை வரிகள்?''

"கவிஞர் நீலமணியின் கவிதை ஒன்று, எண்பதுகளின் தொடக்கத்தில் பிரபலமாகப் பேசப்பட்டது.

'என்ன வரம் வேண்டும்?
என்றார் கடவுள்.
அதுகூடத் தெரியாத
நீர் என்ன கடவுள்?' ''

- கே.வித்யாதரன், நாகர்கோவில்.

"எல்லா நாடுகளும் வல்லரசாக ஆசைப்படுவது ஏன்?''

" 'நானும் ரவுடிதான்' என்று ஏரியாவில் ஃபார்ம் ஆக ஆசைப்படுவதால்!''

- சி.மணி, வாழப்பாடி.

"நவீன அறிவியல் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது?''

"உங்கள் அடுப்பங்கரையில் அப்பளம் சுடுவதைக் கூட சேட்டிலைட் மூலம் படம் எடுக்கவும் முடியும்... ஆயிரக்கணக்கான மக்களை இனப் படுகொலை செய் வதை ஒரு தடயமும் இல்லாமல் மூடி மறைக்கவும் முடியும் என்கிற அளவுக்கு!''

- ஆ.யேசுராஜ், விருதுநகர்.

"மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பைச் சம்பாதித்து இருப்பது ஏன்?''

" 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்று இயக்கம் தொடங்கியவர்களே, உழுபவனிடம் இருந்து நிலங் களைப் பிடுங்க ஆரம்பித்ததால்!''

-பழ.குணசேகரன், சென்னை-28.

எழுதலாம் எல்லோரும்!
கேள்வியும் பதிலும் உங்களுடையதே. தபாலில் அனுப்பலாம்.
அல்லது செல்போனில் QA (space) உங்க சரக்கை 562636 நம்பருக்கு
நறுக்குனு தட்டிவிடுங்க. பளிச் பரிசு நிச்சயம்!

 
நானே கேள்வி.. நானே பதில்!
-
நானே கேள்வி.. நானே பதில்!