Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்


08-07-09
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
 
5 கேள்விகள்
5 கேள்விகள்

அமைச்சர் பெரியகருப்பனிடம்...

"நீங்கள் பங்கேற்ற கூட்டத்திலேயே பெட்ரோல் குண்டுகள் வீசுகிறார்கள் என்றால், சட்டம்-ஒழுங்கு சரி இல்லை என்றுதானே அர்த்தம்?''

"தேர்தலில் தோல்வி ஏற்பட்டதால், குறுகிய மனப்பான்மை உள்ள வர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள். ஆனால், ஒரு மணி நேரத்துக்கு உள்ளாகவே தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடித்துள்ளது போலீஸ்.''

5 கேள்விகள்

அபிராமி ராமநாதனிடம்...

" 'திரையரங்க வளாகத்திலேயே பார் நடத்த அனுமதிக்க வேண்டும்' என அரசிடம் உங்கள் சங்கம் கோரிக்கை வைக்கப்போகிறதாமே?''

"எங்கள் திரையரங்க உரிமையாளர் சங்கம் அப்படியரு கோரிக்கை வைக்காது.''

ஏவி.எம்.சரவணனிடம்...

"கலைஞர் மனதை யாரும் புண்படுத்த வேண்டாம் என்று பேசியிருக்கின்றீர்களே, கலைஞரை யாரும் விமர்சிக்கக் கூடாதா?''

"தமிழ் சினிமாவுக்கு நிறைய சலுகைகளைக் கேட்காமல் செய்துகொடுத்தவர் கலைஞர். இத்தகைய மனம் படைத்தவரை யாரும் காயப்படுத்தாதீர்கள் என்றுதான் சொன் னேனே தவிர, விமர்சிக்கக் கூடாது என்று பேசவில்லை.''

5 கேள்விகள்

தமிழக டி.ஜி.பி. ஜெயினிடம்...

"சென்ட்ரலில் ரயிலைக் கடத்திய குற்றவாளியைக் கண்டு பிடிப்பதில் இவ்வளவு காலதாமதம் ஏன்?''

"தனிப் படை போலீஸார் ஆந்திரா சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் முறையான அறிவிப்பு வரும்."

நடிகை ஸ்ரேயாவிடம்...

"தியானம், யோகா என அதிகமாக ஆன்மிக வழியில் இறங்கிவிட்டீர்களாமே?''

"தொடர்ந்து நடித்து வருவதால் உடம்புக்கும், மனசுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் தேவைப்பட்டுச்சு. அதனாலதான் கோவை ஆசிரமத்துல தங்கி ஆறு நாட்கள் யோகாவும், தியானமும் கத்துக்கிட்டேன். இதைவெச்சு நான் ஆன்மிகத்துல மூழ்கிட்டேன்னு அர்த்தமா?''

 
5 கேள்விகள்
-
5 கேள்விகள்