Published:Updated:

திண்டுக்கல்லில் புலிக்குளம் காளைகள் கண்காட்சி!

திண்டுக்கல்லில் புலிக்குளம் காளைகள் கண்காட்சி!
திண்டுக்கல்லில் புலிக்குளம் காளைகள் கண்காட்சி!

திண்டுக்கல்: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, திண்டுக்கல்லில் புலிக்குளம் காளைகளுக்கான கண்காட்சியை தமிழ்நாடு கால்நடைத்துறை இன்று நடத்தியது.

திண்டுக்கல்லில் புலிக்குளம் காளைகள் கண்காட்சி!

காங்கேயம், புலிக்குளம், உம்பளாச்சேரி, பர்கூர் ஆகிய நான்கும் தமிழ்நாட்டின் பாரம்பரிய மாட்டு ரகங்கள் ஆகும். இதில் 60 சதவீதத்திற்கும் மேல் ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் புலிக்குளம் வகையைச் சேர்ந்தவை.

உச்சநீதிமன்ற தடை காரணமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாத காரணத்தால், புலிக்குளம் மாடுகள் வளர்க்கும் பெரும்பாலானோர் அந்த மாடுகளை விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதை தடுக்கும் வகையிலும், பாரம்பரிய வகை மாடுகளை வளர்ப்போர்களை ஊக்கப்படுத்தவதற்காகவும் தமிழ்நாடு அரசு கால்நடைத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

திண்டுக்கல்லில் புலிக்குளம் காளைகள் கண்காட்சி!

அதன் ஒரு பகுதியாக இன்று திண்டுக்கல் முத்தழகுபட்டியில் புலிக்குளம் மாடுகளுக்கான கண்காட்சி ஒன்றை கால்நடைத்துறை ஏற்பாடு செய்திருந்தது. இதில் தென் மாவட்டத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட காளைகள் காட்சி நிறுத்தி வைக்கப்பட்டன. சிறந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.20ஆயிரமும், இரண்டாம் பரிசாக 2 காளைகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், மூன்றாம் பரிசாக நான்கு காளைகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டன.

திண்டுக்கல்லில் புலிக்குளம் காளைகள் கண்காட்சி!

சிவகங்கை மாவட்டம், புலிக்குளம் என்ற ஊரில் இந்த ரகம் தோன்றியதால் புலிக்குளம் மாடுகள் என அழைக்கப்படுகின்றன. தமிழகத்தில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய பகுதிகளில் இந்த வகை மாடுகள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் மொத்தம் 44ஆயிரம் புலிக்குளம் மாடுகள் இருப்பதாக கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

-ஆர்.குமரேசன்

படங்கள்: வீ.சிவக்குமார்