Published:Updated:

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் 6 பேர் சிக்கினர்!

Vikatan Correspondent
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் 6 பேர் சிக்கினர்!
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் 6 பேர் சிக்கினர்!
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் 6 பேர் சிக்கினர்!

மும்பை: மும்பையில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 8வது தொடர், நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தது.

இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை வைத்து மும்பை நாக்பாடாவில் உள்ள பாம்பே இன்டர்நேஷனல் ஓட்டலில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் காவல்துறையினர் அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஓட்டலில் உள்ள ஒரு அறையில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காவலர்கள் வருவதை பார்த்ததும் அந்த அறையில் இருந்தவர்கள் தப்பித்து ஓட முயன்றனர். அப்போது, 6 பேரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.

மேலும் அந்த அறையில் இருந்த 51 செல்போன்கள், 51 சிம் கார்டுகள் மற்றும் 2 மடிக்கணினிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.