Published:Updated:

நிதி நிறுவன முறைகேடுகளைத் தடுக்க கடுமையான சட்டம் தேவை: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: நிதி நிறுவன முறைகேடுகளைத் தடுப்பதற்காக கடுமையான சட்டத்தைக் கொண்டு வருவதில் மாநில அரசு தீவிரமாக உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இது குறித்து மேற்கு வங்க சட்டப்பேரவையில் மம்தா பானர்ஜி பேசும்போது, ''திரிணமூல் அரசால் கொண்டு வரப்பட்டு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மேற்கு வங்க நிதி நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களை பாதுகாக்கும் மசோதாவுக்கு (2013) குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை தெரிவித்த தகவலில், தமிழ்நாட்டில் அமலில் உள்ள அதேபோன்றதொரு சட்டத்தில் உள்ள விதிமுறையைக் கடைபிடித்தால் மட்டுமே, அந்த மசோதாவை சட்டமாக்க முடியும் என்று கூறப்பட்டது. ஆனால், மேற்கு வங்க அரசுக்கு இதில் உடன்பாடு இல்லை. தமிழ்நாட்டில் உள்ள நிதி நிறுவன முறைகேடு தடுப்புச் சட்டத்தின்படி, குற்றவாளிகளை அபராதம் செலுத்திய பின்பு ஜாமீனில் விடுவிக்கலாம். ஆனால், மேற்கு வங்கத்தில் அவ்வாறு அனுமதிக்க முடியாது.

கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதற்காகவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற விதி, அந்த மசோதாவில் சேர்க்கப்பட்டது. மசோதாவில் குறிப்பிட்டுள்ளபடி ஆயுள் தண்டனையை மட்டுமாவது அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை, மாநில அரசு வலியுறுத்தும். இதுதொடர்பாக, மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு