Published:Updated:

மேகி நூடுல்ஸ் உணவுக்கு தமிழகத்திலும் வருகிறது தடை:அரசு தீவிரம்!

மேகி நூடுல்ஸ் உணவுக்கு தமிழகத்திலும் வருகிறது தடை:அரசு தீவிரம்!
மேகி நூடுல்ஸ் உணவுக்கு தமிழகத்திலும் வருகிறது தடை:அரசு தீவிரம்!

மேகி நூடுல்ஸ் உணவுக்கு தமிழகத்திலும் வருகிறது தடை:அரசு தீவிரம்!

மேகி நூடுல்ஸ் உணவுக்கு தமிழகத்திலும் வருகிறது தடை:அரசு தீவிரம்!

சென்னை: சர்ச்சையில் சிக்கியுள்ள மேகி நூடுல்ஸ் என்ற சீன உணவுக்குத் தமிழகத்திலும் தடைவிதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நூடுல்ஸ் எனப்படும் அவசர உணவுப் பொருளை இந்தியாவில் 15 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தயாரித்து பரபரப்பாக விற்பனை செய்து வருகின்றன.

இதில் நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் "மேகி நூடுல்ஸ்" அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக விற்பனையாகும் உணவுப்பொருளாக உள்ளது. 2 நிமிடங்களில் இந்த உணவைத்  தயாரித்து சாப்பிட்டு விடலாம் என்பதால் நடுத்தர மக்களிடம் நூடுல்ஸ்க்கு அதிக வரவேற்பு உள்ளது.

நூடுல்சில் கால்சியம், புரதம், நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் நூடுல்சில் இவை மிக, மிக குறைந்த அளவே உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நூடுல்ஸ்  சுவையை அதிகரிக்க செய்ய "எம்.எஸ்.ஜி." என்று அழைக்கப்படும் "மோனோ சோடியம் குளுட்டாமேட்" என்ற ரசாயனப் பொருள் சேர்க்கப்படுகிறது. இது ஈயம் ஆகும். இது உடலில் சேரும் போது, பல்வேறு நோய்களை ஏற்படுத்தி விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பீகார், உத்தரபிரதேசம் மாநிலங்களில் நூடுல்ஸ் சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்ததால் மேகி நூடுல்சை சோதிக்க அம்மாநில அரசுகள் உத்தரவிட்டன. அப்போது மேகி நூடுல்சில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரசயானப் பொருள் கலவை சேர்க்கப்படுவது தெரியவந்தது.

இது நாடெங்கும் மேகி நூடுல்ஸ் உணவுப் பொருள் மீது சந்தேகத்தையும் பயத்தையும் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து பெரும்பாலான மாநில அரசுகள் மேகி நூடுல்சை சோதிக்க உத்தரவிட்டுள்ளன. கேரள மாநில அரசு மேகி நூடுல்சை விற்க தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசும் மேகி நூடுல்ஸ் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி 32 மாவட்டங்களிலும் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுக்களை மாதிரிகளாக உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சேகரித்துள்ளனர்.

அந்த மாதிரி மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுக்கள் சென்னை, கோவை, சேலம், தஞ்சை, நெல்லை, மதுரை ஆகிய 6 இடங்களில் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆய்வு பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு மேகி நூடுல்ஸில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரசாயனப் பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யப்படும்.

6 பரிசோதனைக் கூடங்களில் நடந்து வரும் ஆய்வுகள் தொடர்பான முடிவு இன்று பிற்பகல் தொடங்கி நாளைக்குள் தெரிந்து விடும். தமிழக அரசிடம் அந்த பரிசோதனை முடிவுகள் அறிக்கையாக கொடுக்கப்படும்.

எனவே தமிழ்நாட்டில் மேகி நூடுல்ஸ் விற்பதற்கு தடை வருமா, இல்லையா என்பது இன்று அல்லது நாளை தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த வார இறுதியில் தான் இது குறித்த முடிவை தமிழக அரசு வெளியிடும் என்று மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
 

அடுத்த கட்டுரைக்கு