Published:Updated:

ஆதிவாசி மக்களுக்காக போராட்டங்கள் தொடரும்: மாவோயிஸ்ட்கள் ஆவேசம்!

ஆதிவாசி மக்களுக்காக போராட்டங்கள் தொடரும்: மாவோயிஸ்ட்கள் ஆவேசம்!
ஆதிவாசி மக்களுக்காக போராட்டங்கள் தொடரும்: மாவோயிஸ்ட்கள் ஆவேசம்!

ஆதிவாசி மக்களுக்காக போராட்டங்கள் தொடரும்: மாவோயிஸ்ட்கள் ஆவேசம்!

கோவை: ஆதிவாசி மக்களை பாதுகாக்கும் போராட்டங்கள் தொடரும் என கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாவோயிஸ்ட்கள் தெரிவித்தனர்.

கோவை அருகே கருமத்தம்பட்டியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்த மோஸ்ட் வான்டட் மாவோயிஸ்ட்களான ரூபேஷ், அவரது மனைவி சைனா உள்ளிட்ட 5 பேரை தமிழக க்யூ பிரிவு போலீசார் கடந்த மாதம் 4-ம் தேதி கைது செய்தனர். தமிழகம், கேரளா, கர்நாடகா பகுதியில் ஆயுதப்போராட்டம் நடத்த இவர்கள் சதித்திட்டம் தீட்டியதாக இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து 10 நாள் போலீஸ் காவலிலும் எடுத்து தமிழக போலீசார் விசாரித்தனர்.

ஆதிவாசி மக்களுக்காக போராட்டங்கள் தொடரும்: மாவோயிஸ்ட்கள் ஆவேசம்!

இதையடுத்து, கடந்த 2007-ம் ஆண்டில் மாவோயிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் மல்ல ராஜரெட்டி, அவரது மனைவி பீச்ச சுகன்யா ஆகியோரை தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக கேரளா போலீசார் தொடர்ந்த வழக்கில் மாவோயிஸ்ட்கள் ரூபேஷ், சைனாவை கேரளா போலீசார் கைது செய்தனர். அவர்களை கேரளா போலீசாரும் 10 நாள் போலீஸ் காவலிலும் எடுத்து விசாரித்தனர். இந்நிலையில், கோவை நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட்கள் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இதற்காக கேரளாவில் இருந்து ரூபேஷ், சைனா ஆகியோரும், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனூப், வீரமணி, கண்ணன் ஆகியோரும் கோவை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாவோயிஸ்ட்கள், 'நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. சட்டவிரோதமாக எந்த செயலிலும் ஈடுபடவில்லை. ஒரு மாத கஸ்டடி முடிந்து விட்டது. எங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க அனுமதிக்க வேண்டும்' என்றனர்.

ஆதிவாசி மக்களுக்காக போராட்டங்கள் தொடரும்: மாவோயிஸ்ட்கள் ஆவேசம்!

அப்போது பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர், 'இவர்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டியதில்லை. தமிழக சிறையிலேயெ வைக்கலாம்' என்றார். அடுத்த விசாரணையின் போது இதை முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஜூலை மாதம் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதன் பின்னர் ரூபேஷ், சைனா ஆகியோர் கேரளா கோண்டு செல்லப்பட்டனர். அனூப், வீரமணி, கண்ணன் ஆகியோர் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், "எத்தனை பொய் வழக்குகளை போட்டு எங்களை கைது செய்தாலும், எங்கள் போராட்டங்களை ஒடுக்க முடியாது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து ஆதிவாசிகளை விரட்டியடிப்பதை ஏற்க மாட்டோம். கர்நாடகாவில் தேசிய பூங்கா என்ற பெயரில் பூர்விக மக்களை விரட்டியடிப்பதை ஏற்க முடியாது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி விடுதலை பிரதேசமாக்கும் போராட்டம் தொடரும். கேரளா, கர்நாடகா, தமிழகத்தில் போராட்டங்கள் தொடரும்" என்றார்.

-ச.ஜெ.ரவி,

படங்கள்: தி.விஜய்

அடுத்த கட்டுரைக்கு